பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவ ராய்ப்பூரில் சத்தீஸ்கர் விதான்சபாவின் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் தாம் ஆற்றிய உரையின் முக்கிய தருணங்களை பிரதமர் பகிர்ந்து கொண்டார்

Posted On: 01 NOV 2025 4:15PM by PIB Chennai

நவ ராய்ப்பூரில் சத்தீஸ்கர் விதான்சபாவின் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் சில முக்கிய பகுதிகளை அவர் பகிர்ந்துள்ளார்

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தனித்தனி இடுகைகளில், திரு மோடி பதிவிட்டதாவது:

இன்று, சத்தீஸ்கர் சட்டமன்றத்தின் பிரமாண்டமான மற்றும் நவீன புதிய கட்டிடத்துடன், மதிப்பிற்குரிய அடல் அவர்களின் உருவச்சிலை திறக்கப்பட்டபோது, இந்த உணர்வுகள் மனதில் வெளிப்படுத்தப்படுகின்றன…”

"டிஜிட்டல் வசதிகளுடன் கூடிய புதிய சத்தீஸ்கர் சட்டமன்றக் கட்டிடம், வரும் பல தசாப்தங்களுக்கு மாநிலத்தின் கொள்கை, ஆணை மற்றும் முடிவெடுப்பதற்கான முக்கிய மையமாக மாறும் என்று நான் நம்புகிறேன். இங்கு எடுக்கப்படும் முடிவுகள் சத்தீஸ்கரின் எதிர்காலத்தை வடிவமைக்கும்.”

"நமது புதிய நாடாளுமன்றத்தின் காட்சியகங்கள் இந்தியாவின் ஜனநாயகத்தை பழங்காலத்துடன் இணைப்பது போல, சத்தீஸ்கர் சட்டமன்றத்தின் புதிய கட்டிடமும் பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியின் தனித்துவமான சங்கமத்தைக் கொண்டுள்ளதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.”

" ‘குடிமக்களே இறைவன்என்பது நமது நல்லாட்சிக்கான தாரக மந்திரம். எனவே, சீர்திருத்தங்களை விரைவுபடுத்தும் மற்றும் சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் சட்டங்களை நாம் வலியுறுத்த வேண்டும்.”

"அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது, நாம் அனைவரும் "நாட்டிற்காக இறைவன்" மற்றும் "தேசத்திற்காக ராமர்" என்று சபதம் செய்தோம். அவரது தாய்வழி வீடான சத்தீஸ்கரில் அவரது கொள்கைகளை நாம் உணர வேண்டும்.”

****

(Release ID: 2185191)

AD/RB/RJ


(Release ID: 2185558) Visitor Counter : 6