பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மாநாடு 2025 பிரதமர் நவம்பர் 3 ஆம் தேதி துவக்கி வைக்கிறார்

प्रविष्टि तिथि: 02 NOV 2025 9:29AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி  வரும் நவம்பர் 3-ஆம் தேதி அன்று புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், காலை 9:30 மணியளவில் வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மாநாடு (ESTIC) 2025-ஐத் தொடங்கி வைக்கவுள்ளார். இந்த நிகழ்வில் அவர் மாநாட்டு பிரதிநிதிகளிடையே  உரையாற்றவும் உள்ளார்.

 நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு  சூழலுக்கு மிகப் பெரிய உந்துதல் அளிக்கும் விதமாக, பிரதமர் அவர்கள் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு  திட்ட நிதியையும் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டமானது, நாட்டில் தனியார் துறையை மையமாகக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சூழலை வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

இஎஸ்டிஐசி 2025 மாநாடானது நவம்பர் 3 முதல் 5 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதில் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், தொழில் துறை மற்றும் அரசாங்கத்தைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர். இவர்களுடன் நோபல் பரிசு பெற்றவர்கள், புகழ்பெற்ற விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களும் கலந்துகொள்ள உள்ளனர். மேம்பட்ட பொருட்கள் மற்றும் உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, உயிர் உற்பத்தி, நீலப் பொருளாதாரம், டிஜிட்டல் தகவல்தொடர்புகள், மின்னணு மற்றும் செமி கண்டக்டர் உற்பத்தி, வளர்ந்து வரும் வேளாண்மை தொழில்நுட்பங்கள், ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை, சுகாதாரம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பங்கள், குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட 11 முக்கிய கருப்பொருள் பகுதிகளில் விவாதங்கள் கவனம் செலுத்தும்.

இந்த மாநாட்டில் முன்னணி விஞ்ஞானிகளின் உரைகள், குழு விவாதங்கள், விளக்கக்காட்சிகள் மற்றும் தொழில்நுட்பக் காட்சிகள் இடம்பெறும். இது ஆராய்ச்சியாளர்கள், தொழில் துறையினர் மற்றும் இளம் கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோருக்கு இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் சூழலை வலுப்படுத்த ஒரு தளத்தை வழங்கும்.

***

(Release ID: 2185399 )

AD/VK/RJ


(रिलीज़ आईडी: 2185554) आगंतुक पटल : 50
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada