பிரதமர் அலுவலகம்
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தில் இந்தியாவின் முன்னேற்றங்களை விவரிக்கும் கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
Posted On:
31 OCT 2025 7:20PM by PIB Chennai
டிஜிட்டல் இந்தியா முதல், ஆழமான தொழில்நுட்பம் வரை, சந்திரயான் முதல் உயிரி பொருளாதாரம் வரையிலான பல்வேறு துறைகளில் இந்தியாவின் அபாரமான வளர்ச்சியை எடுத்துரைக்கும் வகையில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுதியுள்ள கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
உலகளாவிய தலைமையில் இந்தியாவின் வளர்ச்சியைக் குறிப்பிட்டு, கூட்டு முயற்சிகளின் வாயிலாக அறிவியல் மற்றும் புத்தாக்கத்தில் உலகளாவிய தலைமையை நாடு மறுவரையறை செய்வதாகவும், மிகுந்த நம்பிக்கையுடனான தற்சார்பு இந்தியா, தற்போது உலக நாடுகளை ஊக்குவிக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இது சம்பந்தமாக, சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் குறிப்பிட்டிருப்பதாவது:
“டிஜிட்டல் இந்தியாவிலிருந்து ஆழமான தொழில்நுட்பம் வரை, சந்திரயானிலிருந்து உயிரி பொருளாதாரம் வரையிலும், இன்னும் பலவற்றிலும், இந்தியா சாதனை படைத்து வருகிறது!
நம் அனைவரின் முயற்சியால், அறிவியல் மற்றும் புத்தாக்கத்தில் நமது நாடு உலகளாவிய தலைமையை மறுவரையறை செய்து வருகிறது. மேலும் நம்பிக்கையான தற்சார்பு இந்தியா இப்போது உலக நாடுகளை ஊக்குவிக்கிறது.
பல ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பற்றி மேலும் அறிய, மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் @DrJitendraSingh எழுதிய கட்டுரையைப் படியுங்கள்.”
(Release ID: 2184819)
***
AD/BR/SH
(Release ID: 2184992)
Visitor Counter : 4