பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                    
                    
                        சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாளில் இந்தியா அவருக்கு மரியாதை செலுத்துகிறது: பிரதமர் 
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                31 OCT 2025 8:05AM by PIB Chennai
                
                
                
                
                
                
                சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாளில் இந்தியா அவருக்கு மரியாதை செலுத்துகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சர்தார் வல்லபாய் படேலின் பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்திய பிரதமர், இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு பின்னால் உந்துசக்தியாக இருந்தவர் என்றும், அதன் உருவாக்க ஆண்டுகளில் தேசத்தை கட்டமைப்பதில் தீர்மானகரமான பங்களிப்பை செய்தவர் என்றும் கூறியுள்ளார். தேச ஒருமைப்பாடு, நல்ல நிர்வாகம், மக்கள் சேவை ஆகியவற்றில் சர்தார் படேலின் அசைக்க முடியாத உறுதிப்பாடு வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றுபட்ட, வலுவான, தற்சார்பு இந்தியா என்ற சர்தார் படேலின் தொலைநோக்குப் பார்வையை நிலைநிறுத்த தேசத்தின் கூட்டு தீர்மானத்தை பிரதமர் மறுஉறுதி செய்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாளில் இந்தியா அவருக்கு மரியாதை செலுத்துகிறது. இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு பின்னால் அவர் உந்துசக்தியாக இருந்தார். இதன் மூலம் அதன் உருவாக்க ஆண்டுகளில் நமது தேசத்தை கட்டமைத்தார். தேச ஒருமைப்பாடு, நல்ல நிர்வாகம், மக்கள் சேவை ஆகியவற்றில் அவரது அசைக்க முடியாத உறுதிப்பாடு வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிப்பதாக இருக்கும். ஒன்றுபட்ட, வலுவான, தற்சார்பு இந்தியா என்ற அவரது தொலைநோக்குப் பார்வையை நிலைநிறுத்த தேசத்தின் கூட்டு தீர்மானத்தை நாம் மறுஉறுதி செய்வோம்.”
***
(Release ID: 2184425)
SS/SMB/AS/KR
                
                
                
                
                
                (Release ID: 2184507)
                Visitor Counter : 14
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam