தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க விரும்பும் ஊடகவியலாளர்கள் பதிவு செய்யலாம்
Posted On:
29 OCT 2025 3:32PM by PIB Chennai
56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா குறித்த செய்தி சேகரிக்க விரும்பும் ஊடகவியலாளர்கள் அதற்கான அங்கீகார அட்டையை பெறுவதற்கு தற்போது https://accreditation.pib.gov.in/eventregistration/login.aspx என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 நவம்பர் 5 வரை இத்தளத்தில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவா பனாஜியில் 2025 நவம்பர் 20 முதல் 28 வரை இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது. அங்கீகார அட்டை பெறும் ஊடகவியலாளர்கள் திரைப்படங்கள் திரையிடல், குழு விவாதங்கள், உலகம் முழுவதும் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்களுடனான அமர்வுகள் ஆகியவற்றில் பங்கேற்க முடியும். அத்துடன் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் அங்கீகார அட்டை பெற்ற ஊடக வியலாளர்களுக்காக 2025 நவம்பர் 18 அன்று திரைப்படம் குறித்த பயிற்சியை அளிக்கவுள்ளது. முந்தைய பதிப்புகளில் பங்கேற்காத பத்திரிகையாளர்களுக்கு இந்த ஆண்டு பங்கேற்க முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் உள்ள வழிமுறைகளை கவனமாக படித்து, செல்லத்தக்க அடையாளச் சான்று மற்றும் தொழில்முறை சான்றுகள் உட்பட தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விரிவான தகுதி அளவுகோல்கள் மற்றும் ஆவண வழிகாட்டுதல்கள் அங்கீகார இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.
உதவி அல்லது விசாரணைகளுக்கு, பத்திரிகையாளர்கள் iffi.mediadesk@pib.gov.in என்ற முகவரியில் பத்திரிகை தகவல் அலுவலக இந்திய சர்வதேச திரைப்பட விழா ஊடக ஆதரவு மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
கோவாவின் பனாஜியின் அழகிய பின்னணியில் அமைக்கப்படும் இத்திரைப்பட விழா, உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் அதே வேளையில், இந்தியாவின் சினிமா மரபைக் கொண்டாடுகிறது. ஆண்டுதோறும், 45,000-க்கும் மேற்பட்ட திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஒன்பது நாட்கள் சினிமா கொண்டாட்டத்திற்காக ஒன்று கூடுகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183748
***
SS/IR/AG/SH
(Release ID: 2183940)
Visitor Counter : 9
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam