PIB Headquarters
வேளாண் விளை நிலங்களிலிருந்து நுகர்வோரை சென்றடைவதற்கான அறுவடைக்குப் பிந்தைய இந்தியாவின் விநியோக நடைமுறைகள்
Posted On:
29 OCT 2025 10:18AM by PIB Chennai
இந்தியாவில் அறுவடைக்குப் பிந்தைய நடைமுறைகள் மிகப் பெரிய பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக விரைவில் அழுகக் கூடிய பழவகைகள், காய்கறிகள், பால், இறைச்சி, கோழி மற்றும் மீன் ஆகியவற்றை விநியோகிப்பதில் பல்வேறு சவால்கள் உள்ளன. அறுவடைக்குப் பிந்தைய வேளாண் விளைபொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து, பாதுகாப்பதற்கான கிடங்கு வசதிகள், பதப்படுத்துதல் போன்ற விநியோகச் சங்கிலிகளில் குறிப்பிடத்தக்க இழப்பு ஏற்படுவதாக பல்வேறு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இது போன்ற சவால்கள் விவசாயிகளின் வருவாயைக் குறைப்பதுடன் நுகர்வோருக்கான விலைவாசியும் அதிகரிக்க வழி வகுக்கிறது. மேலும் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கேள்விக்கு உள்ளாகிறது.
இது போன்ற சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மத்திய உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகம் ஒருங்கிணைந்த குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. பிரதமரின், வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு பகுதியாக குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விளைவிக்கப்படும் இடத்திலிருந்து சில்லறை விற்பனை நிலையங்களை அடையும் வரை உள்ள விநியோக நடைமுறைகளில் பொருட்களைப் பாதுகாக்கும் வகையில் குளிர்பதனக் கிடங்குகள் முக்கியப் பங்கு வகிக்கிறது.
கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற 15-வது நிதிக்குழுக் கூட்டத்தில் பிரதமரின் வேளாண் மேம்பாட்டுத் திட்டத்திற்காக கூடுதலாக 1920 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதன் மூலம் 2026 மார்ச் மாதம் வரை இத்திட்டத்திற்காக மொத்தம் 6,520 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183607
***
SS/SV/KPG/SH
(Release ID: 2183913)
Visitor Counter : 8