புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் எட்டாவது அமர்வில் குடியரசுத்தலைவர் உரையாற்றினார்

Posted On: 28 OCT 2025 6:11PM by PIB Chennai

புதுதில்லியின் பாரத் மண்டபத்தில் இன்று (28.10.2025) நடைபெற்ற சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ஐஎஸ்ஏ) எட்டாவது அமர்வில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு சிறப்புரையாற்றினார். 550-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 30 அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர்.

"சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு ஏற்கனவே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அடுத்த கட்டம், மேம்படுத்தப்பட்ட உள்ளடக்கமாக இருக்க வேண்டும்.  இந்த சூரிய சக்தி புரட்சியில் எந்தப் பெண்ணும், விவசாயியும், கிராமமும், சிறிய தீவும் பின்தங்கிவிடவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். சூரிய சக்தியில் இயங்கும் உலகத்தை உருவாக்க அனைத்து ஐஎஸ்ஏ உறுப்பு நாடுகளுடனும் இணைந்து பணியாற்றுவதில் இந்தியா உறுதியாக உள்ளது”, என்று திருமதி திரௌபதி முர்மு கூறினார்.

“இன்று, இந்தியா ஒரு பங்கேற்பாளராக மட்டுமல்லாமல், உலகளாவிய எரிசக்தி மாற்றத்தில் ஒரு தலைமையாகவும் முன்னணியில் உள்ளது. இந்தியா இப்போது உலகின் 4-வது பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் உள்ளது. புதைபடிவமற்ற மூலங்களிலிருந்து 50% திறன் என்ற தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு இலக்கை இந்தியா காலக்கெடுவிற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே அடைந்தது. இந்தியா உலகளாவிய தெற்கின் குரல். மேலும் ஐஎஸ்ஏ மூலம், நாடுகள் சூரிய சக்தியைப் பயன்படுத்தவும் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறோம்”, என்று புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சரும் மற்றும் ஐஎஸ்ஏ தலைவருமான  திரு பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183434

(Release ID: 2183434)

***

SS/BR/SH


(Release ID: 2183563) Visitor Counter : 4