PIB Headquarters
இந்தியாவில் முதியோர்: எண்ணிக்கை, சவால்கள் அரசின் முன்முயற்சிகள்
प्रविष्टि तिथि:
28 OCT 2025 11:06AM by PIB Chennai
இந்தியா விரைவான மக்கள்தொகை மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது, முதியோர் எண்ணிக்கை (60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) 2011-ல் 10 கோடியிலிருந்து 2036-ல் 23 கோடியாக இரு மடங்கிற்கும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2036-ம் ஆண்டில், ஏழு இந்தியர்களில் ஒருவர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருப்பார் என்பதை இது குறிக்கிறது. இது நாட்டின் மக்கள்தொகை அமைப்பின் அடிப்படை மறுசீரமைப்பைக் குறிக்கிறது. இந்த மாற்றத்தை மனதில் கொண்டு, குறைந்து வரும் கருவுறுதல் மற்றும் அதிகரித்து வரும் ஆயுட்கால விகிதங்களால் எழும் சவால்களைச் சமாளிக்க இந்தியா பல கொள்கைகள், திட்டங்கள் மற்றும் சட்ட விதிகளை ஏற்றுக்கொண்டுள்ளது.
சிறந்த ஊட்டச்சத்து, சுகாதாரப் பராமரிப்பு ஆகியவை இந்தியாவில் மக்கள் நீண்ட காலம் வாழ உதவியுள்ளன, ஆனால் இது முதியோர் எண்ணிக்கை உயர்வதற்கான புதிய சவால்களையும் வாய்ப்புகளையும் கொண்டுவருகிறது. குறிப்பாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய முதியவர்கள் மற்றும் கணவரை இழந்தவர்களுக்கு ஓய்வூதியம், போதுமான வீட்டுவசதி மற்றும் தரமான சுகாதார சேவைகளை அணுகுவதற்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில் குடும்பம் மற்றும் சமூகம் தலைமையிலான முன்முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் முதியோர் ஆதரவை நோக்கிய அணுகுமுறை, டிஜிட்டல் கல்வியறிவு பயிற்சி, நீண்டகாலப் பராமரிப்பு காப்பீடு, டிஜிட்டல் சுகாதார அணுகல், உதவி தொழில்நுட்பங்கள் மற்றும் ஈடுபாட்டு தளங்கள் ஆகியவை இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் முதியோர்களை திறம்பட ஒருங்கிணைப்பதற்கு மிக முக்கியமானவையாகும். இது பல்வேறு துறைகளில் முதியோர் தங்கள் அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பங்களிக்க உதவும் வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.
கேரளா, தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளைப் போலவே அதிக எண்ணிக்கையிலான முதியோர் உள்ளனர். கேரளாவில் 2011-ல் 13% ஆக இருந்த முதியோர் எண்ணிக்கை 2036- ம் ஆண்டில் 23% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2036-ம் ஆண்டில் அதிக முதியோர் மக்கள்தொகையைக் கொண்ட மாநிலமாக மாறும். இதற்கு நேர்மாறாக, பல வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் தற்போது குறைவான முதியோர் உள்ளனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருகிறது. தென் மாநிலங்கள், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகியவை சராசரியை விட அதிகமான முதியோர் மக்கள்தொகையைக் கொண்டுள்ளன.
முதியோர் பராமரிப்பை உள்ளடக்கிய கட்டமைப்பை, பயனுள்ள, திறமையான மற்றும் காலக்கெடுவுடன் செயல்படுத்துவதற்காக அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் அதே வேளையில், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள், தனியார் துறையினர் போன்ற பல்வேறு பங்குதாரர்களைப் பயன்படுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183196
***
SS/PKV/KR
(रिलीज़ आईडी: 2183252)
आगंतुक पटल : 35