மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

மின்னணு சாதன உதிரிப்பாகங்கள் உற்பத்தித் திட்டம் 36,559 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்திக்கும் 5,100 நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் வகை செய்கிறது – இதற்கான உற்பத்தி அலகுகள் தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் நிறுவுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Posted On: 27 OCT 2025 5:25PM by PIB Chennai

மின்னணு சாதன உதிரிப்பாகங்கள் உற்பத்தித் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 7 முக்கிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது பல்தட அச்சு சர்க்யூட் போர்டுகள், தாமிரத்திலான  கிளாட் லாமினேட்ஸ், கேமராவிற்கான பாகங்கள் மற்றும் பாலிபிரப்போலின் பில்ம்ஸ், ஆகியவை உற்பத்தி செய்யப்பட உள்ளன.

இந்த நடவடிக்கை இந்தியாவின் உற்பத்தித்துறை வளர்ச்சிக்கு முக்கிய  படிநிலையாகும். இது மின்னணு சானதங்களின் உதிரிப் பாகங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் மற்றும் எந்திரங்களின் முழுமையான உற்பத்திக்கு உதவிடும்.

மத்திய அரசின் இந்தத் திட்டத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனஙகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இதுவரை 249 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது 1.15 லட்சம் கோடி  ரூபாய் முதலீடுகளைப் பிரதிபலிப்பதாகவும், 10.34 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி மற்றும் 1.42 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் வகை செய்கிறது. மின்னணுவியல் துறையில், இந்தியாவின் உறுதிப்பாடான செயல்பாடுகள், உயர் அளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 5,532 கோடி ரூபாய் மதிப்பிலான 7 திட்டங்களுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 36,559 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்திக்கும் 5,100 நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் வகை செய்கிறது.

இதற்கான உற்பத்தி அலகுகள் தமிழ்நாட்டில் 5 இடங்களிலும், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் தலா ஒரு இடத்திலும் நிறுவுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182986

***

SS/SV/KPG/SH


(Release ID: 2183070) Visitor Counter : 16