பாதுகாப்பு அமைச்சகம்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்ட உள்நாட்டு உபகரணங்கள் இந்தியாவின் நிலையை உயர்த்தியது: மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
Posted On:
27 OCT 2025 3:38PM by PIB Chennai
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஆயுதப்படையினர் பயன்படுத்திய இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட உபகரணங்கள் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் இந்தியாவின் நிலையை உயர்த்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் ‘பாதுகாப்பு தற்சார்பு : உள்நாட்டு தொழில்துறை மூலம் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்திய பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியாளர்கள் ஆண்டு கூட்டத்தில் இன்று (2025 அக்டோபர் 27) அவர் உரையாற்றினார். தனிப்பட்ட துணை அமைப்புகள் மற்றும் உபகரணங்களின் உற்பத்தி, தொழில்நுட்பம் அடிப்படையிலான உற்பத்தி, புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டில் கவனம் செலுத்துவதன் மூலம் தற்சார்பு முயற்சியை மேலும் அதிகரிக்குமாறு உள்நாட்டு தொழில்துறையினரை குறிப்பாக தனியார் துறையினரை திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஆகாஷ் ஏவுகணை, பிரமோஸ்,ஆகாஷ் தீர் வான் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் இதர உள்நாட்டு உபகரணங்களின் வலிமையை உலக நாடுகள் கண்டதாக அவர் தெரிவித்தார். இந்நடவடிக்கையின் வெற்றி துணிச்சல்மிக்க ஆயுதப்படையினர், புதுமை கண்டுபிடிப்புகள், வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் முன்னணியாக பணியாற்றிய தொழில்துறை வீரர்களுக்கு உரித்தாகும் என்று அவர் கூறினார். ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையுடன் பாதுகாப்பின் மிக முக்கிய தூண்களில் ஒன்றாக இந்திய தொழில்துறை திகழ்வதாக அவர் தெரிவித்தார். போர் போன்ற சூழ்நிலைகளில் நமது சுய அடித்தளத்தின் அடிப்படையில் நாம் தயாராக இருக்க வேண்டும் என்று திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182918
***
SS/IR/AG/SH
(Release ID: 2183026)
Visitor Counter : 6