தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தனியார் வானொலி ஒலிபரப்பாளர்களுக்கான டிஜிட்டல் வானொலி ஒலிபரப்பு கொள்கை வடிவமைக்கப்பட்டு மத்திய அரசுக்கு ட்ராய் பரிந்துரை செய்துள்ளது.
Posted On:
27 OCT 2025 1:17PM by PIB Chennai
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் 2024 எப்ரல் 23 அன்று இந்திய தொலைத் தொடர்பு ஓழுங்குமுறை ஆணையச் சட்டம் (ட்ராய்) 1997 பிரிவு 11(1)(ஏ)(i)-ன் படி, தனியார் வானொலி ஒலிபரப்பாளர்களுக்கான டிஜிட்டல் வானொலி ஒலிபரப்புக் கொள்கைகளை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ளது.
தனியார் வானொலி ஒலிபரப்பாளர்களுக்கான டிஜிட்டல் வானொலி கொள்கையை வடிவமைத்து ட்ராய், மத்திய அரசுக்கு இம்மாதம் 3-ம் தேதி தனது பரிந்துரையை அனுப்பியுள்ளது.
இந்தக் கொள்கை வடிவமைப்பில் உள்ள பிழைகள் சரிசெய்யப்பட்டு இறுதி பரிந்துரைகளை ட்ராய் தனது இணையதளத்தில் (www.trai.gov.in.) வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்கள் மற்றும் விளக்கங்களுக்கு இந்திய தொலைத்தொரடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ஒலிபரப்பு & கேபிள் சேவைகள்) ஆலோசகர் டாக்டர் தீபாலி சர்மாவை அவரது தொலைபேசி எண்: +91-11- 20907774-ல் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
***
(Release ID: 2182830 )
SS/SV/KPG/KR
(Release ID: 2182958)
Visitor Counter : 7