அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

2025-ம் ஆண்டுக்கான தேசிய அறிவியல் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது

प्रविष्टि तिथि: 26 OCT 2025 2:57PM by PIB Chennai

விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பல்வேறு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புத் துறைகளில்  சிறந்த புத்தாக்கம் மற்றும் ஊக்கமளிக்கும் பங்களிப்புகளுக்கான நாட்டின் மிக உயர்ந்த அங்கீகாரமான ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் எனப்படும் தேசிய அறிவியல் விருகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

தலைசிறந்த ஆராய்ச்சி மற்றும் ஊக்கமளிக்கும் சாதனைகளை அங்கீகரித்து ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு நிறுவப்பட்ட நான்கு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது:

1. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எந்தவொரு துறையிலும் வாழ்நாள் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விஞ்ஞான் ரத்னா (VR) விருது.

2. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எந்தவொரு துறையிலும் சிறப்பான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விஞ்ஞான் ஸ்ரீ (VS) விருது.

3. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எந்தவொரு துறையிலும் சிறப்பான பங்களிப்பைச் செய்த 45 வயது வரையிலான இளம் விஞ்ஞானிகளை அங்கீகரித்து ஊக்குவிக்கும் விஞ்ஞான் யுவ-சாந்தி ஸ்வரூப் பட்நாகர் (VY-SSB) விருது.

4. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒரு குழுவில் இணைந்து பணியாற்றி சிறந்த பங்களிப்பைச் செய்த மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட விஞ்ஞானிகள்/ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழுவிற்கு விஞ்ஞான் குழு (VT) விருது வழங்கப்படும்.

இயற்பியல், வேதியியல், உயிரியல் அறிவியல், கணிதம் & கணினி அறிவியல், புவி அறிவியல், மருத்துவம், பொறியியல் அறிவியல், வேளாண் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், தொழில்நுட்பம் & புதுமை, அணுசக்தி, விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பிற தொடர்புடைய துறைகள் என 13 துறைகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. தேசிய வளர்ச்சிக்கான அறிவியல் சிறப்பையும் தொழில்நுட்பத் தலைமையையும் வளர்ப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை விருது உறுதிப்படுத்துகிறது.

ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் 2025க்கான பரிந்துரைகள் அக்டோபர் 4 முதல் நவம்பர் 17, 2024 வரை பிரத்யேக போர்டல் (https://awards.gov.in/) வழியாக வரவேற்கப்பட்டன, மேலும் இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர், ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் குழுவின் தலைவர், அறிவியல் துறைகளின் செயலாளர்கள், கல்விக்கூடங்களின் தலைவர்கள் மற்றும் ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட கள வல்லுநர்கள் உள்ளிட்ட புகழ்பெற்ற அறிவியல் தலைவர்கள் குழுவால் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எந்தவொரு துறையிலும் 2025 ஆம் ஆண்டிற்கான ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற்றவர்களின் பெயர்கள் பின்வருமாறு:

விஞ்ஞான் ரத்னா: பேராசிரியர் ஜெயந்த் விஷ்ணு நர்லிகர் (இயற்பியல்) மறைவுக்குப் பிறகு

 விஞ்ஞான்  ஸ்ரீ: டாக்டர் ஞானேந்திர பிரதாப் சிங் (வேளாண் அறிவியல்); டாக்டர் யூசுப் முகமது ஷேக் (அணு ஆற்றல்); டாக்டர் கே தங்கராஜ் (உயிரியல் அறிவியல்); பேராசிரியர் பிரதீப் தலப்பில் (வேதியியல்); பேராசிரியர். அனிருத்தா பால்சந்திர பண்டிட் (பொறியியல் அறிவியல்); டாக்டர். எஸ் வெங்கட மோகன் (சுற்றுச்சூழல் அறிவியல்); பேராசிரியர் மகான் எம்.ஜே (கணிதம் மற்றும் கணினி அறிவியல்); திரு ஜெயன் என் (விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்)

3. விஞ்ஞான் யுவா: டாக்டர். ஜக்திஸ் குப்தா கபுகந்தி (வேளாண் அறிவியல்); டாக்டர். சதேந்திர குமார் மங்ருதியா (வேளாண் அறிவியல்); திரு  தேபர்கா சென்குப்தா (உயிரியல் அறிவியல்); டாக்டர். தீபா ஆகாஷே (உயிரியல் அறிவியல்); டாக்டர். திபியேந்து தாஸ் (வேதியியல்); டாக்டர் வலியுர் ரஹ்மான் (புவி அறிவியல்); பேராசிரியர் அர்கப்ரவா பாசு (பொறியியல் அறிவியல்); பேராசிரியர் சப்யசாச்சி முகர்ஜி (கணிதம் மற்றும் கணினி அறிவியல்); பேராசிரியர் ஸ்வேதா பிரேம் அகர்வால் (கணிதம் மற்றும் கணினி அறிவியல்); டாக்டர் சுரேஷ் குமார் (மருத்துவம்); பேராசிரியர் அமித் குமார் அகர்வால் (இயற்பியல்); பேராசிரியர் சுர்ஹுத் ஸ்ரீகாந்த் மோர் (இயற்பியல்); திரு அங்கூர் கார்க் (விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்); பேராசிரியர் மோகனசங்கர் சிவபிரகாசம் (தொழில்நுட்பம் மற்றும் புதுமை)

4. விஞ்ஞான் குழு: குழு- அரோமா மிஷன் சிஎஸ்ஐஆர் (வேளாண் அறிவியல்)

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நாட்டின் தொலைநோக்கு பார்வை கொண்டவர்களை கௌரவிப்பதன் மூலம், ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் அடுத்த தலைமுறையை ஊக்குவித்தல், ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் உலகளாவிய தலைவராக இந்தியாவின் பயணத்தை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருது வழங்கும் விழா உரிய நேரத்தில் நடைபெறும், மேலும் விருது பெற்றவர்களுக்கு தனித்தனியாக அறிவிக்கப்படும்.

***

(Release ID: 2182615)

AD/PKV/RJ


(रिलीज़ आईडी: 2182706) आगंतुक पटल : 89
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Telugu , Malayalam