பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முப்படைகளின் கூட்டு செயல்பாடு ஆபரேஷன் சிந்தூரில் நிருபணம் : பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

प्रविष्टि तिथि: 22 OCT 2025 6:33PM by PIB Chennai

முப்படைகளின் கூட்டுசெயல்பாடு  மற்றும் ஒருங்கிணைப்பு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது நிருபிக்கப்பட்டதாகவும் இது அப்படைகளின் அசாதாரண செயல்பாடு என்றும் பாதுகாப்புத்துறை  அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

புதுதில்லியில் அக்டோபர் 22, 2025 அன்று நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய அவர், மாறிவரும் உலக ஒழுங்கு மற்றும் வளர்ந்து வரும் போர் முறைகளால் எழும் சவால்களைச் சமாளிக்க ஒருங்கிணைந்த, தகவமைப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு உத்திகளை வகுப்பதில் அரசாங்கத்தின் உறுதியை ஆபரேஷன் சிந்தூர் மீண்டும் உறுதிப்படுத்தியது என்று கூறினார்.

இன்றைய காலகட்டத்தில் பாரம்பரிய பாதுகாப்பு எற்பாடுகள் போதுமானதாக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நாட்டின் பாதுகாப்பிற்கும், உத்திகளோடு எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் ஆயுதப் படைகளை உருவாக்கவும் பல துணிச்சலான மற்றும் உறுதியான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181602

***

SS/VK/SH


(रिलीज़ आईडी: 2181677) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Telugu