குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனை மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் சந்தித்தார்

Posted On: 21 OCT 2025 6:48PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் சந்தித்துப் பேசினார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் முக்கிய முன்முயற்சிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து குடியரசு துணைத்தலைவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. உற்பத்தி மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ளுதல், இந்தியாவின் உற்பத்தித் திறன்களை வலுப்படுத்துதல் மற்றும் உலகளாவிய ஏற்றுமதி மையமாக நாட்டை நிலை நிறுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும்  குடியரசு துணைத்தலைவரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தியாவில் உற்பத்தி செய்தல், உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம், பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம், ஸ்டார்ட் அப் இந்தியா, தேசிய உற்பத்தி இயக்கம், தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள், ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு முன்முயற்சி, தொழில்துறை வழித்தடங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளின் பாதுகாப்பு போன்ற திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான சர்வதேச மையமாக இந்தியாவை உயர்த்துவதற்கான அமைச்சகத்தின் முயற்சிகளையும், புதிய சந்தைகளை உருவாக்குவதற்கான முன்முயற்சிகளையும் குடியரசு துணைத்தலைவர் பாராட்டினார். வளர்ச்சியடைந்த இந்தியா தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு, அனைத்துத் துறைகளிலும் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

(Release ID: 2181320)

***

SS/BR/SH


(Release ID: 2181376) Visitor Counter : 7