குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் காவலர்களுக்குப் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்
Posted On:
21 OCT 2025 4:29PM by PIB Chennai
காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு காவலர்களின் துணிச்சல் மற்றும் தியாகத்திற்கு குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
காவலர் நினைவு தினம் என்பது நமது காவல் படையினரின் முன்மாதிரியான துணிச்சலையும், உயர்ந்த தியாகத்தையும் போற்றும் ஒரு சந்தர்ப்பமாகும் என்று குடியரசு துணைத்தலைவர் தமது செய்தியில், கூறியுள்ளார். தேசத்தைப் பாதுகாப்பதற்கும், மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அனைத்துக் குடிமக்களின் ஆழ்ந்த மரியாதையைப் பெறுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
நெருக்கடியான நேரங்களிலும், மனிதாபிமான உதவி தேவைப்படும் காலங்களிலும் உறுதியான அர்ப்பணிப்புடன் சேவை செய்யத் தயாராக இருப்பதன் மூலம், காவல்துறையினர் துணிச்சல், இரக்கம் மற்றும் விடாப்பிடியான கடமை உணர்வை வெளிப்படுத்துகிறார்கள் என்று குடியரசு துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2181260)
SS/SMB/SG
(Release ID: 2181301)
Visitor Counter : 12