பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜப்பான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமிகு சானே தக்காய்ச்சிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 21 OCT 2025 11:24AM by PIB Chennai

ஜப்பான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமிகு சானே தக்காய்ச்சிக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். தமது எக்ஸ் தள செய்தியில், இந்தியா-ஜப்பான் இடையே சிறப்பு உத்திசார்ந்த மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டைப் பிரதமர் மோடி வெளிப்படுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி  கூறியிருப்பதாவது:

"சானே தக்காய்ச்சி, ஜப்பான் பிரதமராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா-ஜப்பான் இடையே சிறப்பு உத்திசார்ந்த மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன். இந்தோ-பசிபிக் மற்றும் அதற்கு அப்பால் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்கு நமது ஆழமான உறவுகள் இன்றியமையாதவை.

@takaichi_sanae"

****

(Release ID: 2181099)

SS/SMB/SH


(Release ID: 2181202) Visitor Counter : 10