திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
பிலிப்பைன்ஸ் நாட்டிற்கான அறிவுசார் பரிமாற்ற இயக்கத்திற்கு மத்திய இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி தலைமை தாங்குகிறார்
Posted On:
21 OCT 2025 9:02AM by PIB Chennai
உலக வங்கி 2025 அக்டோபர் 20 முதல் 22 வரை ஏற்பாடு செய்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டிற்கான உயர்நிலை அறிவுசார் பரிமாற்ற இயக்கத்திற்கு மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவு மற்றும் கல்வித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி தலைமை தாங்குகிறார். இந்தியப் பிரதிநிதிகள் குழுவில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.
புலம் பெறும் தொழிலாளர்களுக்கான துறை, தொழில்நுட்பக் கல்வி, திறன் மேம்பாட்டு ஆணையம், பிலிப்பைன்ஸ் புள்ளியியல் ஆணையம் மற்றும் வெளிநாடுவாழ் தொழிலாளர்கள் நலன் நிர்வாகம் போன்ற முக்கிய பிலிப்பைன்ஸ் நிறுவனங்களுடன் இந்த இயக்கம் உத்திசார்ந்த விவாதங்களை நடத்துகின்றது.
திறன் மேம்பாடு, தொழிலாளர் செயல்பாடு மற்றும் தரவுசார்ந்த கொள்கை கட்டமைப்புகள் தொடர்பான துறைகளில், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது, அறிவுசார் பரிமாற்றத்தை மேம்படுத்துவது ஆகியவை இந்தப் பயணத்தின் நோக்கமாகும். இந்த இயக்கம் மனித மூலதன மேம்பாடு, பரஸ்பர கற்றலை மேம்படுத்துதல், திறன் மற்றும் தொழில்முனைவு மூலம், சமமான மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான வழிவகைகளை உருவாக்குதல் ஆகியவற்றில் இணைந்து செயல்படுவதன் உலகளாவிய தெற்குப் பகுதியின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
***
(Release ID: 2181064 )
SS/IR/KPG/SG
(Release ID: 2181123)
Visitor Counter : 8