குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 19 OCT 2025 5:39PM by PIB Chennai

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தீபாவளி என்பது தீமையின் மீது நன்மையின் வெற்றியையும், அறியாமையின் மீது அறிவு பெற்ற வெற்றியையும் கொண்டாடுவதாக அவர் தமது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். தீபாவளி என்பது நமது நாகரிக நெறிமுறைகளில் ஆழமாக வேரூன்றிய தாராள மனப்பான்மை, தர்மம் மற்றும் உள்ளடக்கிய தன்மை ஆகியவற்றின் மதிப்புகளை, சமூகத்தின் ஏழை மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு நாம் பகிர்ந்து கொண்டு ஆதரவை வழங்கும்போது பிரகாசிக்கும் ஒரு நாள் என்று அவர் கூறியுள்ளார்.

தீபாவளியைக் கொண்டாடும்போது,  நமது தனிப்பட்ட நன்மைக்காக மட்டுமின்றி , நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காகவும், நாம் அனைவரும் எதிர்மறை மற்றும் அதர்ம எண்ணங்களைத்  தவிர்த்து, நேர்மறை மற்றும் தர்மத்தைத் தழுவ வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

இந்த பண்டிகையின் போது ஒவ்வொரு வீட்டிலும் கூட்டாக ஏற்றப்படும் தீபங்களைப் போலவே, நமது அர்ப்பணிப்பும் ஈடுபாடும்  இணைந்து பாரதத்தின் கூட்டு வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும் என்று திரு சி.பி. ராதாகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளார்.

அனைவருக்கும் அமைதி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியம் என்ற ஆசிகளைப் பொழிய லட்சுமி தேவியை வேண்டி, அனைவருக்கும் தமது அன்பான வாழ்த்துகளை அவர் தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத்தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு;

தீபாவளி பண்டிகையின் புனிதமான நாளில், நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் இந்திய நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபாவளி என்பது தீமையின் மீது நன்மையின் வெற்றியையும், அறியாமையின் மீது அறிவு பெற்ற வெற்றியையும் கொண்டாடுகிறது. தீபாவளி என்பது நமது நாகரிக நெறிமுறைகளில் ஆழமாக வேரூன்றிய தாராள மனப்பான்மை, தொண்டு மற்றும் உள்ளடக்கிய தன்மை ஆகியவற்றின் மதிப்புகளை, ஏழை மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு நாம் பகிர்ந்து கொண்டு நமது ஆதரவை வழங்கும்போது அதில் ஆழமாகத் தெளிவாகிறது.

இந்த ஆண்டு, தீபாவளியைக் கொண்டாடும் வேளையில், நமது சொந்த தனிப்பட்ட நன்மைக்காக மட்டுமின்றி, நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காகவும், எதிர்மறை மற்றும் அதர்மத்தைத் தவிர்த்து, நேர்மறை மற்றும் தர்மத்தை ஏற்றுக்கொள்வோம் -

இந்தப் பண்டிகையின்போது ஒவ்வொரு வீட்டிலும் கூட்டாக ஏற்றப்படும் தீபங்களைப் போலவே, நமது அர்ப்பணிப்பும் ஈடுபாடும் பாரதத்தின் கூட்டு வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

லட்சுமி தேவி உங்கள் அனைவருக்கும் அமைதி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தின் ஆசீர்வாதங்களைப் பொழிய பிரார்த்திக்கிறேன்.

சுபமான தீபாவளி!

***

AD/PKV/SH


(Release ID: 2180886) Visitor Counter : 16