இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உடல்தகுதி இந்தியா இயக்கம் அக்டோபர் 31 முதல் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது

Posted On: 17 OCT 2025 1:47PM by PIB Chennai

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாளையொட்டி 2025 அக்டோபர் 31 முதல் “ஒற்றுமையின் இரும்பு சக்கரங்கள்” என்ற பொருளில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுகள், தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தனது லட்சிய திட்டமான உடல்தகுதி இந்தியா  இயக்கத்தின் கீழ் நாடு தழுவிய இரண்டு மிதிவண்டி பயணங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. தேச ஒற்றுமையையும், உடல்தகுதி மற்றும் வலுவான இந்தியா உணர்வையும் அடையாளப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் நாடு முழுவதும் நடைபெறும்.

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் அக்டோபர் 31 அன்று தொடங்கும் மிதிவண்டி பயணம் பஞ்சாப், தில்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா வழியாக 4480 கி.மீ. தூரத்தை நிறைவு செய்து தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் நவம்பர் 16 அன்று நிறைவடையும். இதில் 150 பேர் பங்கேற்பார்கள். இந்தப் பயணத்திற்கு 2023 மே 17 அன்று எவரெஸ்ட் சிகரத்தை எட்டியவரும், இந்தியாவில் இருந்து லண்டனுக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டவருமான நிஷா குமாரி தலைமை தாங்குவார்.

மற்றொரு சைக்கிள் பயணம் அருணாச்சலப் பிரதேசத்தின் பங்சாவிலிருந்து அக்டோபர் 31 அன்று புறப்பட்டு அசாம், மேற்குவங்கம், பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகியவற்றின் வழியாக சுமார் 4000 கி.மீ. தூரம் பயணம் செய்து டிசம்பர் 31 அன்று குஜராத்தின் முந்த்ராவில் நிறைவடையும். இந்தப் பயணப்பாதையில் மிதிவண்டியில் செல்வோர் சுமார் 1 லட்சம் மரக்கன்றுகளை நடுவார்கள். மேலும் பள்ளிகள், கல்லூரிகளில் பருவநிலை மாற்றம் மற்றும் உடல்தகுதி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்துவார்கள்.

இந்த இரண்டு வகையிலான சைக்கிள் பயணத்தில்  பங்கேற்போருக்கு இளைஞர் நலன், விளையாட்டுகள், தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2180261

  

***

AD/SMB/AG/SH


(Release ID: 2180509) Visitor Counter : 6