பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
பிரதமரின் தொழில் அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுபவர்களுடன் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார்
प्रविष्टि तिथि:
16 OCT 2025 1:44PM by PIB Chennai
கர்நாடகா மாநிலம் ஹம்பியில் பிரதமரின் தொழில் அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வரும் தொழிலாளர்களின் அர்ப்பணிப்புமிக்க சாதனைகளுக்கு மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இன்ஃபோசிஸ், ஐபிஎம், எம்எஸ்பிஎல், டிசிஎஸ், டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நிறுவனம், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், மங்களூர் ரிபைனரி & பெட்ரோகெமிக்கல்ஸ், எச்ஏஎல், என்எம்டிசி, ஹனிவெல் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் போன்ற நிறுவனங்கள் உட்பட முன்னணியில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் உள்ள பிரதிநிதிகளுடன் 60-க்கும் மேற்பட்ட தொழில் அனுபவ பயிற்சி பெறுபவர்கள் பங்கேற்புடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் கலந்துரையாடினார்.
அப்போது தொழில் அனுபவ பயிற்சி பெறுபவர்கள் தங்களது அனுபவங்கள் மற்றும் விருப்பங்களை அவருடன் பகிர்ந்து கொண்டனர். இந்த அனுபவ பயிற்சியில் பங்கேற்று திறனை வளர்த்து கொள்வதற்கும், தொழில் சார்ந்த நடைமுறைகளை அறிந்து கொள்வதற்கும் ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் இணைவதற்கு அவர்களுக்கு உத்வேகம் அளித்த நிகழ்வு குறித்தும் நிதியமைச்சர் அவர்களிடம் கேட்டறிந்தார். தங்களது அனுபவ பயிற்சியை முடித்து தொழில்முறையில் வெற்றிகரமாக பயணிப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் உத்வேகத்தை அளிக்கும் வகையில் நிதியமைச்சர் அவர்களுடன் கலந்துரையாடினார். இந்த தொழில் அனுபவ பயிற்சி பெறுபவர்களின் சாதனைகளுக்காக பாராட்டு தெரிவித்த நிதியமைச்சர் தொடர்ந்து அவர்களது செயல்பாடுகளில் வெற்றி பெறவும் வாழ்த்து கூறினார்.
தற்போதைய பணிச்சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த அவர், பணியிடங்களில் அர்ப்பணிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் தங்களது ஆளுமை திறனை மேம்படுத்தி கொள்ள இதுபோன்ற தொழில் அனுபவ பயிற்சி திட்டங்கள் பல்வேறு வழிகளில் பங்களிப்பதாக அவர் கூறினார். தகவல் தொடர்பில் உள்ள தடைகளை கடந்து தங்களது இதர திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும், பணிகளுக்கான முக்கிய அம்சங்கள் குறித்து கற்றுகொள்ளவும் இந்தப் பயிற்சி உதவிடும் என்று திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179817
***
SS/SV/AG/SH
(रिलीज़ आईडी: 2180086)
आगंतुक पटल : 20