பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

8-வது தேசிய ஊட்டச்சத்து மாதத்தின் நிறைவு விழா, டேராடூனில் நாளை நடைபெறுகிறது

Posted On: 16 OCT 2025 10:05AM by PIB Chennai

ஊட்டச்சத்து என்பது வெறும் உணவாக மட்டுமின்றி வலிமையான, ஆரோக்கியமான மற்றும் மிகத்திறன் மிக்க இந்தியாவை உருவாக்கக் கூடியது பற்றியதாகும். மகளிர் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து என்பது வலிமையான குடும்பங்கள் மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான அடித்தளம் என்பதை வலியுறுத்தி 8-வது தேசிய ஊட்டச்சத்து மாதம் 2025 (2025, செப்டம்பர் 17- அக்டோபர் 16) செப்டம்பர் 17 அன்று மத்தியப்பிரதேச மாநிலம் தார் பகுதியில் தொடங்கப்பட்டது.

8-வது தேசிய ஊட்டச்சத்து மாதம் 2025-ன் நிறைவு விழா உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இமாலயன் கலாச்சார மையத்தில் நாளை (அக்டோபர் 17) நடைபெறுகிறது. திறன் அங்கன்வாடி மற்றும் ஊட்டச்சத்து 2.0 திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு, சமூக பங்களிப்பு, நடத்தை மாற்றம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக ஒரு மாத காலம் மக்கள் இயக்கமாக நடைபெற்றதை இந்நிகழ்வு குறிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179717

***

SS/IR/KPG/KR


(Release ID: 2179897) Visitor Counter : 6