இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வரைவு தேசிய விளையாட்டு நிர்வாக விதிமுறைகள் குறித்த கருத்துக்கள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம்: மத்திய விளையாட்டு அமைச்சகம்

Posted On: 15 OCT 2025 12:49PM by PIB Chennai

வரைவு தேசிய விளையாட்டு நிர்வாக விதிமுறைகள் (தேசிய விளையாட்டு அமைப்புகள், தேசிய விளையாட்டு வாரியம், தேசிய விளையாட்டு தீர்ப்பாயம்)  ஆகிய 3 வரைவு விதிமுறைகளை மத்திய இளையோர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

இந்த விதிமுறைகள், தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம் 2025-ன் கீழ், வகுக்கப்பட்டு அமல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம் 2025 மக்களவையில் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதியும், மாநிலங்களவையில் ஆகஸ்ட் 12-ம் தேதியும் நிறைவேற்றப்பட்டு ஆகஸ்ட் 18-ம் தேதியன்று குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் வகையிலும், விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகத்தில் அதற்கான விரிவான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் சவால்கள் மற்றும் குறைபாடுகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையிலும் இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையில் அனைத்து நிலைகளிலும் நேர்மையான நடைமுறைகளை உறுதி செய்யவும் விளையாட்டு வீரர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் நாட்டின் விளையாட்டுக்கான சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் இச்சட்டம் வகை செய்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179281  

***

SS/SV/KPG/SH


(Release ID: 2179630) Visitor Counter : 5