பிரதமர் அலுவலகம்
கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் மறைவிற்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல்
Posted On:
15 OCT 2025 2:41PM by PIB Chennai
கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். “கென்யாவின் முன்னாள் பிரதமரும் எனது நெருங்கிய நண்பருமான ரெய்லா ஒடிங்காவின் மறைவு மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது. இந்தியா – கென்யா இடையேயான நட்புறவுக்கு காரணமாக அவர் திகழ்ந்தார். குஜராத் முதலமைச்சராக பொறுப்பு வகித்த நாட்களில் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்புக் கிடைத்தது. எங்களது இந்த நட்பு பல ஆண்டுகளுக்கு தொடர்ந்தது” என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இந்தியா மீது சிறப்பான அன்பை அவர் கொண்டிருந்தார் என்றும் நமது நாட்டின் கலாச்சார மாண்புகள், தொன்மையான ஞானம் ஆகியவற்றின் மீது ஈர்ப்புக் கொண்டவர் என்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான அவர் மேற்கொண்ட முயற்சிகளில் இது பிரதிபலித்தது என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“கென்யாவின் முன்னாள் பிரதமரும் எனது நெருங்கிய நண்பருமான ரெய்லா ஒடிங்காவின் மறைவு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - கென்யா இடையே நட்புறவிற்கு காரணியாக அவர் திகழ்ந்தார். குஜராத் மாநில முதலமைச்சராக பொறுப்பு வகித்த நாட்களில் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தியா மீது நன்மதிப்பு கொண்டிருந்ததுடன் நமது நாட்டின் கலாச்சார மாண்புகள் மற்றும் தொன்மையான ஞானம் ஆகியவற்றின் மீது ஈர்ப்புக் கொண்டிருந்தார். இது இவ்விரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் முயற்சிகளில் பிரதிபலித்துள்ளது. அவர் இந்தியாவின் ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவமுறைகள் மீது பெரும் ஈர்ப்பைக் கொண்டிருந்ததுடன் அவரது மகளின் உடல் ஆரோக்கியத்திற்கு இந்த மருத்துவமுறை ஏற்படுத்திய தாக்கத்தையும் உணர்ந்திருந்தார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கென்ய மக்களுக்கும் இந்தத் தருணத்தில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-----
(Release ID: 2179352 )
SS/SV/KPG/KR
(Release ID: 2179526)
Visitor Counter : 8
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam