தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
நாளை முதல் அமெரிக்காவிற்கு சர்வதேச அஞ்சல் சேவையை இந்தியா மீண்டும் தொடங்குகிறது
Posted On:
14 OCT 2025 4:27PM by PIB Chennai
நாளை (அக்டோபர் 15, 2025) முதல் அமெரிக்காவிற்கான அனைத்து வகையான சர்வதேச அஞ்சல் சேவைகளையும் இந்தியா மீண்டும் தொடங்கவிருக்கிறது. முன்னதாக, அமெரிக்க நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட நிர்வாக உத்தரவைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 22, 2025 தேதியிட்ட அலுவலக குறிப்பாணை மூலம் அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகள் நிறுத்தப்பட்டன. இறக்குமதி வரிகளை வசூலிப்பதற்கும் செலுத்துவதற்கும் அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) அறிமுகப்படுத்திய புதிய ஒழுங்குமுறைத் தேவைகளால் இந்த இடைநிறுத்தம் அவசியமானது.
விரிவான அமைப்புமுறை மேம்பாடு, சிபிபீயால் அங்கீகரிக்கப்பட்ட தகுதிவாய்ந்த தரப்பினருடனான ஒருங்கிணைப்பு மற்றும் தில்லி மற்றும் மகாராஷ்டிராவில் வெற்றிகரமான செயல்பாட்டு சோதனைகளுக்குப் பிறகு, இந்திய அஞ்சல் இப்போது விநியோகக் கட்டணம் செலுத்துதல் (டிடிபி) செயலாக்கத்திற்கான இணக்கமான வழிமுறையை நிறுவியுள்ளது. இந்தப் புதிய முறையின் கீழ், அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் சரக்குகள் மீதான சுங்க வரிகளும் முன்பதிவு செய்யும் போது இந்தியாவில் முன்கூட்டியே வசூலிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட தகுதிவாய்ந்த தரப்பினர் மூலம் சிபிபீ-க்கு நேரடியாக அனுப்பப்படும். இது முழுமையான ஒழுங்குமுறை இணக்கம், விரைவான சுங்க அனுமதி மற்றும் அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு கூடுதல் வரி அல்லது தாமதம் இல்லாத தடையற்ற விநியோகத்தை உறுதி செய்கிறது.
அஞ்சல் துறை வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணங்களை வசூலிக்காது. ஏற்றுமதியாளர்கள் திருத்தப்பட்ட அமெரிக்க இறக்குமதி தேவைகளுக்கு இணங்கும்போது மலிவு விலையில் சர்வதேச விநியோக விகிதங்களிலிருந்து தொடர்ந்து பயனடைவதை உறுதி செய்யும் வகையில்,
அஞ்சல் கட்டணங்கள் மாறாமல் இருக்கும். வாடிக்கையாளர்கள் இனி அனைத்து வகையான சர்வதேச அஞ்சல்களையும் தபால் நிலையங்கள், சர்வதேச வணிக மையங்கள் அல்லது அஞ்சல் அலுவலக ஏற்றுமதி மையம் (DNK) அல்லது www.indiapost.gov.in தளம் மூலம் அமெரிக்காவிற்கு அனுப்ப முன்பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178929
(Release ID: 2178929)
***
AD/BR/SH
(Release ID: 2179177)
Visitor Counter : 7