PIB Headquarters
வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கை எட்ட பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான நடவடிக்கை
Posted On:
13 OCT 2025 1:27PM by PIB Chennai
இந்தியாவின் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. 2017-18-ம் ஆண்டில் 23.3 சதவீதமாக இருந்த பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 23-24-ம் ஆண்டில் 41.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பெண்களுக்கு வலுவான சட்டப்பூர்வ ஆதரவை வழங்கும் வகையில் மகப்பேறு சட்டம், பாலின வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சமூகப் பாதுகாப்பு விதிமுறைகள், பிரதமரின் திறன் மேம்பாட்டுத்திட்டம், பெண் சக்தி இயக்கம் போன்ற பல்வேறு பாலின சமத்துவ மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான முன்முயற்சியாக பிரதமரின் முத்ரா திட்டத்தின் மூலம் 68 சதவீத பெண்கள் பயனடைந்துள்ளதுடன் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ், 2.01 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். பெண் சக்தி இயக்கத்தின் கீழ் குழந்தைகள் பாதுகாப்பகம் மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கை எட்டும் வகையில் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றனர்.
நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்களும், கிராமப்புறங்களில் உள்ள கைவினைஞர்கள் முதல் நகர்ப்புறங்களில் உள்ள புதுமை கண்டுபிடிப்பாளர்கள் வரை, அனைத்துப் பணியிடங்களிலும் பெண்கள் பங்கேற்பாளர்களாக இல்லாமல் வலிமை வாய்ந்த செயல்பாட்டாளர்களாக உருவெடுக்கச் செய்வதன் மூலம் பொருளாதார தன்னிறைவை உருவாக்க முடியும். இதுவே வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான உறுதிமொழியாக உள்ளது. பெண்களுக்கு கல்வி, திறன் மேம்பாடு, பாதுகாப்பு, தொழில்முனைவு போன்ற பயிற்சிகளுடன் பொருளாதார மேம்பாட்டிற்கான சூழலை உருவாக்குவதன் மூலம் நாட்டின் பெண் சக்தியை வலுவடையச் செய்ய முடியும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178389
***
SS/SV/KPG/SH
(Release ID: 2178672)
Visitor Counter : 5