மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
சமூக பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சர்வதேச அளவில் பெரும் வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளது
Posted On:
13 OCT 2025 2:22PM by PIB Chennai
சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய 3 போட்டிகளுக்கான அறிவிப்பை மததிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். அனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் என்ற முன்முயற்சியின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள 3 போட்டிகளுக்கான பரிசுத் தொகையாக 5.85 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தலைமையிலான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் தீர்வுகள், சர்வதேச அளவில் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய சவால்கள் மற்றும் இளையோருக்கான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஆகிய 3 அம்சங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.
அனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்:
தேசிய மற்றும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களுக்கு தீர்வு காணும் வகையிலும் பெரிய அளவிலான வாய்ப்புக்களை உருவாக்கும் வகையிலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான போட்டிகள் நடைபெறுகின்றன. இது விவசாயம், பருவநிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, கல்வி, நிதிசார் உள்ளடக்கம், சுகாதாரம், உற்பத்தி, நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து என பல்வேறு முக்கிய துறைகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் தீர்வைக் கண்டறியும் போட்டியாகும். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் முதல் 10 வெற்றியாளர்களுக்கு பரிசுத் தொகையாக 2.5கோடி ரூபாய் வழங்கப்படும்.
பெண்கள் தலைமையிலான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்:
பெண் தொழில் முனைவோருக்கான தளம் நித்தி ஆயோக் மற்றும் சில அமைப்புகள் இணைந்து பெண்கள் தலைமையிலான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் தொடர்பான போட்டிகள். விவசாயம், சைபர் பாதுகாப்பு. டிஜிட்டல் நவாழ்வு, கல்வி, சுகாதாரம், எரிசக்தி மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப அடிப்படையில் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிலான தீர்வுகளை உருவாக்குதல். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் முதல் 10 வெற்றியாளர்களுக்கு பரிசுத் தொகையாக 2.5 கோடி ரூபாய் வழங்கப்படும்.
இருவருக்கான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப போட்டி:
13 முதல் 21 வயது வரையிலான இளைஞர்களின் புத்தாக்கத் திறனை ஊக்குவிக்கும் வகையில், (தனிநபராகவும், குழுவாகவும்) பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையிலான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப அடிப்படையில் தீர்வுகளை உருவாக்குவது. இதில் எதிர்காலத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், நவீன சுற்றுச்சூழல் அமைப்பு போன்ற முக்கிய துறைகளில் போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் முதல் முதல் 10 வெற்றியாளர்களுக்கு பரிசுத் தொகையாக தலா 15 லட்சம் ரூபாயுமும் அடுத்த இடங்களைப் பிடிக்கும் 3 போட்டியாளர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும் சிறப்பு அங்கீகாரமாக இரண்டு போட்டியாளர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178416
***
AD/SV/KPG/SH
(Release ID: 2178661)
Visitor Counter : 5