பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆந்த்ரோபிக் தலைமைச் செயல் அதிகாரி திரு டாரியோ அமோடெய், பிரதமரைச் சந்தித்தார்

Posted On: 11 OCT 2025 10:17PM by PIB Chennai

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு டாரியோ அமோடெய் புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, இந்தியாவில் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் விரிவாக்கம் குறித்தும், நாட்டில் அதிகரித்துள்ள கிளாட் கோட் உள்ளிட்ட அதன் செயற்கை நுண்ணறிவு அம்சங்களின் பயன்பாடு குறித்தும் விவாதங்கள் நடைபெற்றன.

இந்தியாவின் துடிப்பான தொழில்நுட்பச் சூழல் அமைப்பையும், மனிதநேயத்துடன், பொறுப்பான முறையில் செயற்கை நுண்ணறிவுக் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதில் அதன் திறன் வாய்ந்த இளைஞர்களின் மகத்தான ஆற்றலையும் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் விரிவாக்கத்தை அவர் வரவேற்றார்கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற முக்கிய துறைகளில் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுத் திறன்களை இந்த ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு தொடர்பான கொள்கையில் இந்தியாவின் முன்னெச்சரிக்கையான அணுகுமுறையையும், உள்ளடக்கிய வளர்ச்சிக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அதன் கவனத்தையும் திரு டாரியோ அமோடெய் பாராட்டினார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"திரு டாரியோ அமோடெய்-யைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியாவின் துடிப்பான தொழில்நுட்பச் சூழல் அமைப்பும், திறன் வாய்ந்த இளைஞர்களும், மனிதர்களை மையமாகக் கொண்ட, பொறுப்பான செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளை முன்னெடுத்துச் செல்கின்றனர். ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் விரிவாக்கத்தை நாங்கள் வரவேற்கிறோம். முக்கிய துறைகளில் வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த ஒருங்கிணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்குகிறோம். @DarioAmodei”

******

(Release ID: 2177949)

AD/PLM/SG


(Release ID: 2178186) Visitor Counter : 5