இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு - புதுதில்லியில் மருத்துவர்கள், சுகாதார நிபுணர்களுடன் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா பங்கேற்பு
Posted On:
12 OCT 2025 5:39PM by PIB Chennai
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா, இன்று (12.10.2025) புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் (சண்டேஸ் ஆன் சைக்கிள்) நிகழ்வுக்குத் தலைமை வகித்தார். இந்த வார சிறப்பு பங்கேற்பளர்களாக மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள் இதில் கலந்து கொண்டு, உடல் பருமன் போன்ற வாழ்க்கை முறை நோய்களை எதிர்ப்பதில் உடல் செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
தேசத்திற்கு மருத்துவர்களின் பங்களிப்பைப் பாராட்டிய திரு மன்சுக் மண்டவியா, கொவிட் தொற்றுக் காலத்தில் சுகாதார அமைச்சராக பதவி வகித்தபோது மருத்துவர்கள், சுகாதார ஊழியர்களின் அர்ப்பணிப்பை தாம் பார்த்ததாக கூறினார். தேசத்திற்கு அவர்களின் பங்களிப்பு ஈடு இணையற்றது என அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் இன்று (12.10.2025) 10,000-க்கும் அதிகமான இடங்களில் இந்த மிதிவண்டி ஓட்டும் நிகழ்வுக்கு' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க, மக்கள் முதலில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு நடத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். ஆரோக்கியமான உடலும் ஆரோக்கியமான மனமும் ஒரு வலுவான தேசத்தின் அடித்தளமாகும் என்று அவர் கூறினார். மிதிவண்டி ஓட்டுதல் என்பது உடற்பயிற்சியின் எளிதான வடிவம் எனவும், யார் வேண்டுமானாலும் அதை மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
தில்லியில் இந்த நிகழ்வில் அனைத்து வயதினரும் உற்சாகமாக பங்கேற்றனர். இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு (CFI), யோகாசன பாரத் அமைப்பு, மை பாரத் பாரத் தளம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தான.
***
(Release ID: 2178116)
AD/PLM/SG
(Release ID: 2178169)
Visitor Counter : 7