இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
நமது பாரா-தடகள வீரர்கள் புதிய இந்தியாவின் உணர்வை வெளிப்படுத்துகிறார்கள் - மத்திய அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இந்தியாவின் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பாராட்டு
Posted On:
11 OCT 2025 3:46PM by PIB Chennai
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களை மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா இன்று பாராட்டினார். அவர்களின் உற்சாகம், உறுதிப்பாடு, செயல்திறன் ஆகியவற்றுக்காக பாராட்டினார்.
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா தனது சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியது. 6 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களுடன் ஒட்டுமொத்த தரவரிசையில் இந்தியா 10-வது இடத்தைப் பிடித்தது. இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டுத் துறை, பாரா தடகள வீரர்களுக்கு ₹1.09 கோடிக்கு மேல் ரொக்கப் பரிசுகளை வழங்கியது.
பாராட்டு விழாவில் பேசிய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, "நீங்கள் மாற்றுத்திறனாளிகள் அல்ல, பாரதத்தின் சக்தி வாய்ந்த விளையாட்டு வீரர்கள். பதக்கம் வென்று, நீங்கள் நாட்டிற்கு சேர்த்துள்ள பெருமை, மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கமளிக்கும். நீங்கள் காட்டிய ஆர்வம் மகத்தானது," என்று கூறினார்.
போட்டியின் போது விளையாட்டு வீரர்கள் வெளிப்படுத்திய உற்சாகத்துக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடி காட்டிய புதிய இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை தொடர்பான உணர்வு, சிறந்த முறையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார். சர்வதேச அளவில் இந்தியா மிகவும் வெற்றிகரமான பாரா-தடகள நிகழ்வை நடத்தியதன் பின்னணியில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது.
அண்மையில் புதுதில்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் 100 நாடுகளைச் சேர்ந்த 2,100 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், 186 பதக்கப் போட்டிகளில் பங்கேற்றனர்.
***
(Release ID: 2177789)
AD/PLM/RJ
(Release ID: 2177890)
Visitor Counter : 6