பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்தநாளில் பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்

நாடு முழுவதும் சமூக-அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் லோக்நாயக் ஜே.பி. -யின் பங்கை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்

அவசரநிலைக் காலத்தின்போது எழுதப்பட்ட லோக்நாயக் ஜே.பி.-யின் 'சிறைச்சாலை நாட்குறிப்பு' என்ற நூலில் இருந்து அரிய பக்கங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

Posted On: 11 OCT 2025 9:29AM by PIB Chennai

லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இந்தியாவின் மிகவும் துணிவான மனசாட்சி குரல்களில் அவரும் ஒருவர் என்றும், ஜனநாயகம், சமூக நீதி ஆகியவற்றுக்காக அயராது அவர் போராடினார் என்றும் பிரதமர் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

லோக்நாயக் ஜே.பி., சாதாரண மக்களுக்கு அதிகாரமளிப்பதற்கும், அரசியலமைப்பு விழுமியங்களை வலுப்படுத்துவதற்கும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்ததாக பிரதமர் கூறியுள்ளார். சம்பூர்ண கிராந்தி எனப்படும் முழு புரட்சி இயக்கத்துக்கு அவர் அழைப்பு விடுத்தார். அவரது இந்த அழைப்பு, சமத்துவம், நெறிமுறைகள், நல்லாட்சி ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு தேசத்தை கட்டமைப்பதற்கான சமூக இயக்கத்தைத் தூண்டியது.

அவரது பாரம்பரியத்தை நினைவுகூர்ந்துள்ள பிரதமர், லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் ஏராளமான மக்கள் இயக்கங்களுக்கு உத்வேகம் அளித்தார் எனவும் குறிப்பாக பீகார், குஜராத் ஆகிய மாநிலங்களில் அவர் மேற்கொண்ட செயல்பாடுகள் இந்தியா முழுவதும் சமூக-அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்றும் குறிப்பிட்டிள்ளார். இந்த இயக்கங்கள், அவசரநிலையை அமல்படுத்தி அரசியலமைப்பை நசுக்கிய மத்திய காங்கிரஸ் அரசை உலுக்கியதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரநிலையின் போது லோக்நாயக் ஜே.பி. எழுதிய "சிறைச்சாலை நாட்குறிப்பு" என்ற புத்தகத்தின் சில பக்கங்களிலைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார். தனிமைச் சிறையில் ஜே.பி.யின் வேதனையையும் ஜனநாயகத்தின் மீதான அவரது அசைக்க முடியாத நம்பிக்கையையும் இந்தப் புத்தகம் படம்பிடித்து காட்டுகிறது என்று பிரதமர் கூறியுள்ளார். "இந்திய ஜனநாயகத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட ஒவ்வொரு ஆணியும் என் இதயத்தில் அடிக்கப்பட்ட ஆணி போன்றது." என்று லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் கூறியதையும் மேற்கோள் காட்டிப் பிரதமர் தமது கருத்துகளை எடுத்துரைத்துள்ளார்:

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:

"லோக்நாயக் ஜே.பி.-யின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் மிகவும் அச்சமற்ற, மனசாட்சி கொண்ட குரல்களில் அவரது குரலும் ஒன்று. ஜனநாயகம், சமூக நீதி ஆகியவற்றுக்கான அயராத போராளியாகவும் திகழ்ந்த அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்."

"லோக்நாயக் ஜே.பி., சாதாரண மக்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் அரசியலமைப்பின் மதிப்புகளை வலுப்படுத்துவதற்கும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார். சம்பூர்ண கிராந்திக்கான (முழு புரட்சி) அவரது தெளிவான அழைப்பு, சமத்துவம், நெறிமுறைகள், நல்லாட்சி ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது. இவற்றால் கட்டமைக்கப்பட்ட ஒரு தேசத்தை உருவாக்குவதற்கான ஒரு சமூக இயக்கத்தை அது தூண்டியது. அவர் ஏராளமான வெகுஜன இயக்கங்களை, குறிப்பாக பீகாரிலும் குஜராத்திலும் ஊக்கப்படுத்தினார். அவை இந்தியா முழுவதும் சமூக-அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தின. இந்த இயக்கங்கள் அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசை உலுக்கின. அப்போதைய அரசு பின்னர் அவசரநிலையை அமல்படுத்தி நமது அரசியலமைப்பை நசுக்கியது."

லோக்நாயக் ஜே.பி.-யின் பிறந்தநாளில், ஆவணக் காப்பகத்திலிருந்து ஒரு அரிய பார்வை

அவசரநிலையின் போது அவர் எழுதிய "சிறைச்சாலை நாட்குறிப்பு" என்ற புத்தகத்தின் சில பக்கங்கள் இங்கே.

அவசரநிலையின் போது, லோக்நாயக் ஜே.பி. பல நாட்கள் தனிமைச் சிறையில் கழித்தார். அவரது சிறைச்சாலை நாட்குறிப்புகள், அவரது வேதனையையும், ஜனநாயகத்தின் மீதான அவரது அசைக்க முடியாத நம்பிக்கையையும் படம்பிடித்துக் காட்டுகிறது.

"இந்திய ஜனநாயகத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட ஒவ்வொரு ஆணியும் என் இதயத்தில் அடிக்கப்பட்ட ஆணி போன்றது" என்று ஜே.பி. எழுதியுள்ளார்."

***

(Release ID: 2177671)

AD/PLM/RJ


(Release ID: 2177828) Visitor Counter : 7