பிரதமர் அலுவலகம்
காசா அமைதி ஒப்பந்தத்தின் வெற்றிக்காக அதிபர் திரு டிரம்புக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
09 OCT 2025 9:17PM by PIB Chennai
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காசா அமைதி ஒப்பந்தத்தின் வெற்றி குறித்து அமெரிக்க அதிபர் திரு டொனால்ட் டிரம்ப் உடன் உரையாடிய பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த உரையாடலின்போது, இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை தலைவர்கள் இருவரும் ஆய்வு செய்தனர். இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, வரும் வாரங்களில் இருவரும் தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்தனர்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:
“எனது நண்பரான அதிபர் டிரம்ப் உடன் உரையாடினேன், காசா அமைதித் ஒப்பந்தத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் ஆய்வு செய்தோம். வரும் வாரங்களில் இருவரும் தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்தோம்.
@POTUS
@realDonaldTrump”
(Release ID: 2177080)
***
SS/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2177097)
வருகையாளர் எண்ணிக்கை : 47
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada