தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தூய்மையே சேவை இயக்கத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்தது

Posted On: 09 OCT 2025 4:34PM by PIB Chennai

தூய்மையே சேவை இயக்கத்தை 2025 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெற்றிகரமாக நடத்தியது. தூய்மைப்பணி, இல்லந்தோறும் நடவடிக்கைகள், விழிப்புணர்வு முகாம்கள், ஓவியப் போட்டிகள், தூய்மைப் பேரணிகள் மற்றும்  கவிதை ஒப்புவித்தல், தெரு நாடகம், சொற்றொடர் எழுதும் போட்டி ஆகிய பல்வேறு கலாச்சார நடவடிக்கைகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் 2766 நிகழ்வுகளை அமைச்சகம் நடத்தியது.  இந்நிகழ்வுகளில் 59,122 பேர் பங்கேற்றனர்.

தூய்மையே சேவை 2025 இயக்கத்தின் கீழ் 1588 இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டது.  “ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் ஒன்றாக” என்ற கருத்தின் அடிப்படையில் செப்டம்பர் 25 அன்றும் தூய்மை பாரத  தினத்தையொட்டி அக்டோபர் 02 அன்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. அப்போது அதிகாரிகளும் அலுவலர்களும் சாலையில் தூய்மைப்பணியை மேற்கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176828  

***

 SS/IR/AG/SH

 


(Release ID: 2177048) Visitor Counter : 14