தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
சமூகப் பாதுகாப்பில் இந்தியா சிறந்து விளங்குகிறது- மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா
Posted On:
08 OCT 2025 4:12PM by PIB Chennai
குடிமக்களின் சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துவது மற்றும் அவர்களுடைய நல்வாழ்வை உறுதிசெய்தல் ஆகியவற்றுக்கு சிறந்த முயற்சியை மேற்கொண்டதை அங்கீகரிக்கும் வகையில் சர்வதேச சமூகப் பாதுகாப்பு சங்கத்தின் மூலம் சமூகப் பாதுகாப்பில் சிறப்பான சாதனை விருது 2025 இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். இவ்விருதை கடந்த வாரம் மலேசியாவின் கோலாலம்பூரில் மத்திய அரசின் சார்பில் திரு மன்சுக் மாண்டவியா பெற்றுக் கொண்டார்.
இது குறித்துப் பேசிய மத்திய அமைச்சர், சமூகப் பாதுகாப்பு தளத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக மோடி அரசு மேற்கொண்ட மாற்றத்தக்க சீர்திருத்தங்களுக்கான அங்கீகாரமாக இவ்விருது வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். சர்வதேச சமூகப் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்சபையில் இந்தியாவின் வாக்குப்பங்களிப்பு 30 ஆக அதிகரித்துள்ளதாகவும், இது எந்தவொரு உறுப்பு நாட்டையும் விட அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வரம்பாகும் என்று அவர் தெரிவித்தார். இது, உலகளாவிய சமூகப் பாதுகாப்பு உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை வடிவமைப்பதில் இந்தியாவின் வளர்ந்து வரும் தாக்கம் மற்றும் தலைமைத்துவத்தை பிரதிபலிப்பதாக திரு மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டார்.
உலக சமூகப்பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மதிப்புமிக்க உலகளாவிய அங்கீகாரமான சர்வதேச சமூகப் பாதுகாப்பு சங்க விருது வழங்கப்படுகிறது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான உலகின் மிகப்பெரிய தரவு தளங்களில் ஒன்றான இ-ஷ்ரம் தளம் குறித்து சர்வதேச சமூகப் பாதுகாப்பு சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தத் தளத்தின் மூலம் சமூகப்பாதுகாப்பு மற்றும் இதர நலத்திட்ட சேவைகளுக்காக 31 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176307
***
(Release ID: 2176307)
SS/IR/AG/SH
(Release ID: 2176588)
Visitor Counter : 15