உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் நினைவு தினத்தையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை செலுத்தியுள்ளார்

प्रविष्टि तिथि: 08 OCT 2025 2:09PM by PIB Chennai

முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் நினைவு தினத்தையொட்டி மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று மரியாதை செலுத்தியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திரு அமித் ஷா, சமூகத்தின் நலிவடைந்த, ஒடுக்கப்பட்ட, மற்றும் பின்தங்கிய வகுப்பினருக்கு பணியாற்ற ராம்விலாஸ் பாஸ்வான் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்று கூறியுள்ளார். தமது மாணவ பருவ காலங்களில் இருந்தே சமூக நீதி, சமத்துவம் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக அவர் குரல் கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார். ராம்விலாஸ் அவர்களின் இரக்க குணமுடைய ஆளுமை, பொதுச்சேவைக்கான உறுதிப்பாடு என்றும் நமது நினைவில் இருக்கும் என்று கூறியுள்ளார். அவருடைய நினைவு தினத்தில் அன்னாருக்கு தாம் மரியாதை செலுத்துவதாக திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2176212 )

SS/IR/AG/KR

 


(रिलीज़ आईडी: 2176385) आगंतुक पटल : 101
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Telugu , Kannada