பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்திய மொபைல் மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி உரை

மொபைல், தொலைத்தொடர்பு, மின்னணுவியல் உள்ளிட்ட ஒட்டுமொத்த தொழில்நுட்பச் சூழலில் ஏற்படும் சிக்கல்களுக்கு உலக நாடுகளுக்கு தீர்வு வழங்குவதில் இந்தியாவிற்கு சிறப்பான வாய்ப்பு உள்ளது:பிரதமர்

Posted On: 08 OCT 2025 12:40PM by PIB Chennai

இந்திய மொபைல் மாநாட்டை புதுதில்லியில் உள்ள யஷோபூமியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடகம், தொழில்நுட்பத்துறைக்கான இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், இதில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள அனைத்துப் பிரதிநிதிகளையும் வரவேற்றார்.

நிதிசார் மோசடி பாதுகாப்பு, குவாண்டம் தகவல் தொடர்பு, 6ஜி அலைக்கற்றை சேவை, கண்ணாடி இழை தகவல் தொடர்பு மற்றும் குறைகடத்தி உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த கருபொருளில் புத்தொழில் நிறுவனங்கள் எண்ணற்ற செயல்திட்டங்களை வழங்கியுள்ளதாக பிரதமர் கூறினார்.

மொபைல் தொலைத்தொடர்பு ஆகியவற்றைக் கடந்த சில ஆண்டுகளிலேயே ஆசியாவில் மிகப் பெரிய டிஜிட்டல் தொழில்நுட்ப மன்றமாக  இந்திய மொபைல் மாநாடு உருவெடுத்துள்ளது என்று பிரதமர் கூறினார்.

இந்திய மொபைல் மாநாடும் நாட்டின் தொலைத்தொடர்புத் துறை பெற்றுள்ள வெற்றியும், வலுவான தற்சார்பு இந்தியா இயக்கத்தின் தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிப்பதாக உள்ளதென்று அவர் தெரிவித்தார். உற்பத்திக்கான இந்தியா திட்டம் நாட்டின் தொழில்நுட்ப மற்றும் அதிநவீன சாதனங்களை உற்பத்தி செய்யும் திறனை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக அவர் கூறினார்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 4ஜி சேவை, வரும் 2030-ம் ஆண்டுக்குள் 6ஜி அலைக்கற்றை சேவையை வழங்குவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று அவர் தெரிவித்தார். மேலும் நாட்டில் சைபர் பாதுகாப்பிற்கும் சமஅளவிலான முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். சைபர் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் குறைதீர்ப்பு நடைமுறைகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

தொழில்துறை நிறுவனங்கள் நிலையான பெரிய அளவிலான நாட்டின்பொருளாதார முன்னேற்றத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையில் செயல்படுவதற்கான அவசியத்தை எடுத்துரைத்த பிரதமர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் திறன்களை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார். மொபைல் உற்பத்தி,  சிப்செட், மின்கலங்கள், திரைகள், உணர்திறன் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு உதிரிபாகங்களை உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மொபைல், தொலைத்தொடர்பு, மின்னணுவியல் உள்ளிட்ட ஒட்டுமொத்த தொழில்நுட்பச் சூழலில் ஏற்படும் சிக்கல்களுக்கு உலக நாடுகளுக்கு தீர்வு வழங்குவதில் இந்தியாவிற்கு சிறப்பான வாய்ப்பு உள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176166   

***

SS/SV/KPG/KR

 


(Release ID: 2176321) Visitor Counter : 16