PIB Headquarters
பள்ளி நிலையிலான புதுமை கண்டுபிடிப்பாளர்களுக்கான நாடு தழுவிய நிகழ்ச்சி
प्रविष्टि तिथि:
07 OCT 2025 3:19PM by PIB Chennai
சுதேசி, தற்சார்பு இந்தியா, உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் வளமான இந்தியா போன்ற திட்டங்களை கருப்பொருளாகக் கொண்டு நடத்தப்பட்டு வரும் ஹேக்கத்தான் நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில் இருந்து 6 முதல் 12-ம் வகுப்புவரை பயிலும் ஒரு கோடி மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி இம்மாதம் 13-ம் தேதி மெய்நிகர் காட்சி முறையில் அனைத்து பள்ளிகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
தேசிய அளவில் வெற்றிபெறும் 10 பேர், மாநில அளவில் வெற்றிபெறும் 100 பேர், மாவட்ட அளவில் வெற்றிபெறும் 1000 பேருக்கு என மொத்தம் ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பள்ளி கல்வித்துறை, அடல் புதுமை கண்டுபிடிப்பு இயக்கம் மற்றும் நித்தி ஆயோக்குடன் இணைந்து வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைத்தல் என்ற தலைப்பில் நாடு தழுவிய புதுமை கண்டுபிடிப்புகளுக்கான போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே புதுமை கண்டுபிடிப்புகள் குறித்த கலாச்சாரத்தை வலுத்தும் வகையில் நடத்தப்படும் இந்த ஹேக்கத்தான் போட்டியில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை பங்கேற்கச் செய்வதே இதன் நோக்கமாகும். தேசிய கல்விக்கொள்கை 2020-ன் படி நேரடியான சோதனைகள் மூலம் கற்றல் முறையை வளர்ப்பதற்கு இத்தகைய போட்டிகள் வகைசெய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175769
***
AD/SV/AG/SH
(रिलीज़ आईडी: 2176052)
आगंतुक पटल : 42