குடியரசுத் தலைவர் செயலகம்
இந்திய பாரம்பரியம் முழு மனித சமுதாயத்தையும் ஒரே குடும்பமாகக் காண்கிறது – குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு
Posted On:
07 OCT 2025 1:39PM by PIB Chennai
65-வது தேசிய பாதுகாப்பு கல்லூரி பாடப்பிரிவின் ஆசிரியர்கள் மற்றும் உறுப்பினர்கள், குடியரசுத்தலைவர் மாளிகையில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை இன்று (07.10.2025) சந்தித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர் எந்தவொரு நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பிற்கும் நாட்டின் நலன்களும் நோக்கங்களும் அடித்தளமாக உள்ளது என்று தெரிவித்தார். எனினும், உலகளாவிய மதிப்புகள் நமது நாட்டின் நலன்களின் அடிப்படையாக உள்ளதாகக் கூறினார். இந்திய பாரம்பரியம் எப்போதும் முழு மனித சமுதாயத்தையும் ஒரே குடும்பமாகக் கண்டுள்ளது என்று தெரிவித்த அவர், உலகளாவிய சகோதரத்துவமும் அமைதியும் நமது நம்பிக்கைகளாக இருந்து வருகிறது என்று குறிப்பிட்டார். ஆனால் மனித சமுதாயத்திற்கும் நமது நாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும் சக்திகளைத் தோற்கடிக்க போருக்குத் தயாராக இருப்பதற்கும் நாம் முக்கியத்துவம் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது நமது ஆயுதப் படையினர் கூட்டு வலிமையையும், உத்திசார்ந்த தொலைநோக்குப் பார்வையையும் வெளிப்படுத்தியதாக குடியரசுத்தலைவர் கூறினார்.
மாறிவரும் புவிசார் அரசியல் சூழல் மற்றும் பாதுகாப்பு சூழல்கள் துடிப்பான திறன்களைக் கோருவதாக குடியரசுத்தலைவர் கூறினார். இந்திய ஆயுதப் படைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, பலதரப்பட்ட, ஒருங்கிணைந்த செயல்பாடுகளைச் செய்யக்கூடிய மற்றும் போருக்குத் தயாராகும் படையாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ளதைக் குறிப்பிட்டு அவர் மகிழ்ச்சித் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175720
***
SS/IR/KPG/KR
(Release ID: 2175980)
Visitor Counter : 9