தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இந்திய மொபைல் மாநாடு 2025-ஐ அக்டோபர் 8 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார்
Posted On:
06 OCT 2025 4:05PM by PIB Chennai
துவாரகாவின் யஷோபூமியில் 2025 அக்டோபர் 08 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைக்கவுள்ள இந்திய மொபைல் மாநாடு 2025-ன் இறுதி முன்னேற்பாட்டு பணிகளை மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா இன்று ஆய்வு செய்தார்.
இப்பயணத்தின் போது கண்காட்சியில் பங்கேற்கும் புத்தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் கண்காட்சியாளர்கள் ஆகியோருடன் உரையாடினார். தொலைத் தொடர்புத்துறை உயரதிகாரிகள், இந்திய செல்லுலார் சேவையாளர்கள் சங்கம் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களுடன் ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டார். அத்துடன் இந்திய மொபைல் மாநாடு 2025-ன் உலகளாவிய சிறப்பு நோக்கம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கினார்.
இந்திய மொபைல் மாநாடு 2025 தொலைத் தொடர்புக்கான ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும், 5ஜி, செயற்கை நுண்ணறிவு, எம்எல், ஐஓடி மற்றும் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு போன்ற தொழில்நுட்பங்களுக்கு இந்தியாவை மட்டுமின்றி, இந்தியாவையும் உலக நாடுகளையும் இணைப்பதற்கான பாதையாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் திரு சிந்தியா கூறினார்.
இந்த ஆண்டு நடைபெறும் இந்திய மொபைல் மாநாட்டில் 150-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள், 7000 பிரதிநிதிகள் மற்றும் பங்கேற்பாளர்கள் கலந்துகொள்கின்றனர். அத்துடன் 4.5 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட யஷோபூமியில் 400 கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.
இந்திய மொபைல் மாநாடு ஒரு தேசிய தளத்திற்கு அப்பால் மின்னணு களத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறனையும், தலைமையையும் பிரதிபலிக்கும் ஒரு ஆசிய மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப மாநாடாக உருவெடுத்துள்ளது என்று திரு சிந்தியா குறிப்பிட்டார். மேலும் ஆறு மிகப்பெரிய உலகளாவிய உச்சி மாநாடுகளும் இதில் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். மின்னணு புதுமை கண்டுபிடிப்புகளின் முன்னோடிகள் இதில் பங்கேற்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175355
***
SS/IR/AG/SH
(Release ID: 2175502)
Visitor Counter : 6