இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் சிறப்புப் நிகழ்வில் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா கலந்து கொள்ளவிருக்கிறார்

Posted On: 04 OCT 2025 4:58PM by PIB Chennai

உடல்திறன்(ஃபிட்) இந்தியா ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு (ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்) அக்டோபர் 5-ஆம் தேதி மேஜர் தியான்சந்த் தேசிய மைதானத்தில் தனது பிரம்மாண்டமான சர்வதேச ஆசிரியர் தின பதிப்பிற்குத் தயாராகி வருகிறது. இந்த நிகழ்வில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார். ஆரோக்கியம் மற்றும் நிலைத்தன்மைக்கான மக்களின் இயக்கமாக மாறியுள்ள இந்த மிதிவண்டி பேரணியில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் குடிமக்கள் பங்கேற்பார்கள்.

இந்த சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நம்மை வடிவமைத்த ஆசிரியர்களை நாம் கொண்டாடுவோம். நாளை நடைபெற உள்ள உடல்திறன் இந்தியா ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வில் பங்கேற்குமாறு குடிமக்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஆரோக்கியமாகவும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும், தன்னிறைவு அடைந்த இந்தியாவை நோக்கி பாடுபடவும் உறுதியேற்போம், என்று டாக்டர் மாண்டவியா குறிப்பிட்டுள்ளார்.

நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியாவின் வளர்ந்து வரும் ஈட்டி எறிதல் வீரர் சச்சின் யாதவ், சதுரங்க விளையாட்டு வீரர் தானியா சச்தேவ், ஹாக்கி வீரர் அபிஷேக் நைன், உடற்பயிற்சித் துறையில் பல்வேறு கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்து, இந்தியாவின் புஷ்-அப் மேன் என்று அழைக்கப்படும் ரோஹ்தாஷ் சவுத்ரி உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2174804  

******

AD/BR/SG


(Release ID: 2174862) Visitor Counter : 6