குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

விஜயதசமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 01 OCT 2025 5:08PM by PIB Chennai

விஜயதசமியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் .

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: “விஜயதசமியின் புனிதமான நாளில், அனைத்து குடிமக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதர்மத்திற்கு எதிராக தர்மம் பெற்ற வெற்றியைக் குறிக்கும் விஜயதசமி பண்டிகை, உண்மை மற்றும் நீதியின் பாதையைப் பின்பற்ற நம்மைத் தூண்டுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராவண தகனம் மற்றும் துர்கா பூஜையுடன் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை, நமது தேசிய விழுமியங்களைப் பிரதிபலிக்கிறது. கோபம், அகங்காரம் போன்ற எதிர்மறைப் போக்குகளைத் துறக்கவும், தைரியம், உறுதிப்பாடு போன்ற நேர்மறையானவற்றை ஏற்றுக்கொள்ளவும் இந்தப் பண்டிகை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.

நீதி, சமத்துவம் மற்றும் நல்லிணக்கக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, அனைத்து மக்களும் ஒன்றாக முன்னேறும் ஒரு சமூகத்தையும் நாட்டையும் கட்டியெழுப்ப இந்தப் பண்டிகை நம்மை ஊக்குவிக்கட்டும்.”

 

(Release ID: 2173668)

***

SS/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2174201) வருகையாளர் எண்ணிக்கை : 35
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Telugu , Malayalam