குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
வி கே மல்ஹோத்ராவின் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் அஞ்சலி
Posted On:
30 SEP 2025 5:16PM by PIB Chennai
குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், மறைந்த வி கே மல்ஹோத்ராவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், வி கே மல்ஹோத்ராவின் மறைவு மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மக்களின் கவலைகளை ஆழமாக புரிந்துகொண்டு செயல்பட்ட சிறந்த தலைவராக திகழ்ந்தார் என்றும், அவர் மீது மக்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பொது வாழ்வில், குறிப்பாக விளையாட்டுத் துறை உட்பட பல்வேறு துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவு கூரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த துயரமான தருணத்தில் அவரது குடும்பத்தாருக்கும், அவரது நலன் விரும்பிகளுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக குடியரசு துணைத்தலைவர் கூறியுள்ளார்.
***
(Release ID: 2173200)
SS/SV/AG/SH
(Release ID: 2173334)
Visitor Counter : 6