குடியரசுத் தலைவர் செயலகம்
துர்கா பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
29 SEP 2025 7:11PM by PIB Chennai
துர்கா பூஜையை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துப் செய்தியில் கூறியிருப்பதாவது:
“துர்கா பூஜையின் நன்னாளில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது கலாச்சாரம், நம்பிக்கை மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை புனித துர்கா பூஜை பண்டிகை உணர்த்துகிறது. துர்கை அன்னையை அவரது ஒன்பது வடிவங்களில் வழிப்படுவது ஆன்மீக தூய்மைக்கான பாதையை வழி வகுப்பதுடன், உண்மை, நீதி மற்றும் இரக்கத்துடன் பயணிப்பதற்கு நம்மை ஊக்குவிக்கிறது. இந்தப் பண்டிகை சமத்துவம், பொறுமை மற்றும் அன்பின் உணர்வை பறைசாற்றுகிறது.
பெண்களுக்கு மரியாதை வழங்கப்படுவதையும், சமூகத்தில் அவர்களின் உரிமை நிலைநாட்டப்படுவதையும்உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று இந்த புனித தருணத்தில் நாம் உறுதி ஏற்போம். அனைவருக்கும் ஞானம் மற்றும் துணிச்சலை வழங்கி ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் வாழ துர்கை அன்னையை நான் பிரார்த்தனை செய்கிறேன்.”
(Release ID: 2172836)
***
SS/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2172896)
வருகையாளர் எண்ணிக்கை : 32