பாதுகாப்பு அமைச்சகம்
உள்நாட்டு மற்றும் எல்லைப் பாதுகாப்பில் இந்திய கடலோர காவல்படை சிறந்து விளங்குகிறது- பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
Posted On:
29 SEP 2025 1:53PM by PIB Chennai
புதுதில்லியில் இந்திய கடலோர காவல்படையின் தலைமையகத்தில் 42வது இந்திய கடலோர காவல்படை கமாண்டர்கள் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.
நாட்டின் 7500 கிலோமீட்டர் தொலைவிலான கடலோர பகுதி மற்றும் தீவுப் பகுதிகளை பாதுகாப்பது கடற்படையின் பணி மற்றும் மனிதநேய சேவையை அவர் பாராட்டினார். 2025 செப்டம்பர் 28 முதல் 30 வரை நடைபெறும் இம்மாநாட்டில், திட்டமிடல், செயல்படுத்துதல், அதிகரித்துவரும் கடலோர பாதுகாப்பு சவால்களில், நிர்வாக முன்னுரிமைகள் இந்திய கடல் பிராந்தியத்தின் வளர்ந்துவரும் உத்திசார் சிறப்பு அம்சங்கள் குறித்து மூத்த உயரதிகாரிகள் விவாதிக்க உள்ளனர்.
152 படகுகள் மற்றும் 72 விமானங்களுடன் நவீன படையாக தேசிய பாதுகாப்பில் முக்கியத் தூணாக இந்திய கடலோர காவல்படை திகழ்கிறது என்று பாதுகாப்பு அமைச்சர் விவரித்தார். தங்களது பணி மற்றும் மனிதநேய சேவைக்காக, குடிமக்களின் நம்பிக்கை மற்றும் உலகளாவிய அங்கீகாரத்தை இந்திய கடலோர காவல்படை தொடர்ந்து பெற்றுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் எல்லைப் பாதுகாப்பில் இந்திய கடலோர காவல்படையின் தனித்துவம் மிக்க செயல்பாடுகளை திரு ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார். பாதுகாப்புப்படையினர் எல்லை தாண்டிய அச்சுறுத்தல்களையும் மற்ற முகமைகள் உள்நாட்டு பாதுகாப்பை கையாளும் சூழ்நிலையில், இவை இரண்டையும் இந்திய கடலோர காவல்படை தடையின்றி எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரோந்துப் பணியை மேற்கொள்வதன் மூலம், இந்திய கடலோர காவல்படை எல்லை தாண்டிய அச்சுறுத்தல்களை முறியடிப்பது மட்டுமின்றி, சட்டவிரோத மீன்பிடித்தல், போதைப்பொருள் மற்றும் ஆயுதக்கடத்தல், கடத்தல், மனிதக் கடத்தல், கடல் மாசு, முறையற்ற கடல்சார் நடவடிக்கைகள் ஆகியவற்றையும் எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
கடற்படை, மாநில நிர்வாகங்கள் மற்றும் இதர முகமைகளுடன் இணைந்து செயல்படுவது, இந்திய கடலோர காவல்படையின் சிறந்த வலிமையாக கருதப்படுகிறது என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
***
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172658
SS/IR/LDN/SH
(Release ID: 2172809)
Visitor Counter : 12