வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
அரசின் மின்னணு சந்தைக்கான புதிய முன்முயற்சிகள் வாங்குபவர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் பாதுகாப்பான, நேர்மையான மற்றும் இணக்கமான கொள்முதல் வாய்ப்புகளை வழங்குகிறது
Posted On:
25 SEP 2025 4:14PM by PIB Chennai
பொது கொள்முதல் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான நடைமுறைகளை ஊக்குவிக்கும் வகையில், விழிப்புணர்வு வாரப் பிரச்சாரத்தை அரசின் மின்னணு சந்தை தொடங்கியுள்ளது. இந்த சிறப்புப் பிரச்சாரம் முயற்சிகள், பொது கொள் முதல் நடவடிக்கைகளில், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
இந்த சிறப்புப் பிரச்சாரம் விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், இதற்கான கற்றல், முயற்சிகளை மேற்கொள்ளவும், சிறந்த நடைமுறைகளை கொள்முதல் செய்பவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசின் மின்னணு சந்தை மூலம் பாதுகாப்பான நேர்மையான முறையில், கொள்முதல் மற்றும் விற்பனை நடைமுறைகளை மேற்கொள்ள வகை செய்கிறது. தொலைதூரப் பகுதிகளில் உள்ள தொழில்முனைவோர்கள் புத்தொழில் நிறுவனங்கள், எம்எஸ்எம்இ நிறுவனங்கள், 2-வது மற்றும் 3-வது நிலையில் உள்ள நகரங்களிலிருந்து பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான கொள்முதல் மற்றும் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தளமாக அமைகிறது.
இந்தப் பிரச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய மின்னணு சந்தையின் தலைமைச் செயல் அதிகாரி திரு நிஹிர் குமார், இந்தத் தளம் நேர்மையான வெளிப்படைத் தன்மையுடன் கூடிய சந்தை நடவடிக்கைகளை உறுதி செய்வதுடன் பொதுக் கொள்முதலில் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது என்று கூறினார். உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 8 பிரத்யேக விற்பனைக் கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் புத்தொழில் நிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், கைவினைஞர்கள், நெசவாளர்கள் உள்ளிட்டோர் பயனடையும் வகையில் இந்த மின்னணு சந்தையில் பிரத்யேகப் பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பொது கொள்முதல் நடவடிக்கைகளில் மின்னணு சந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவது, இந்த அமைப்பின் மீதான நம்பிக்கையை வலுவடையச் செய்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2171174
***
SS/SV/KPG/SH
(Release ID: 2171479)
Visitor Counter : 8