இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான ஓட்டம் – 91 நாடுகளில் 150 இடங்களில் நடைபெறுகிறது
Posted On:
25 SEP 2025 11:07AM by PIB Chennai
2025 செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 02-ம் தேதி வரை இருவார சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக உலகளாவிய நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகமும், வெளியுறவு அமைச்சகமும் இணைந்து 91 நாடுகளில் 150 இடங்களில் வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான தொடர் ஓட்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
தேசத்திற்கு சேவை செய்வதற்காக ஓட்டம் என்ற பெயரில் 3 முதல் 5 கி.மீ. வரை இந்த ஓட்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான நிகழ்வுகள் 28.09.2025 அன்று நடைபெறவுள்ளன. சுரினாமில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரிய தளமான பரமரிபோ, சான்பிரான்சிஸ்கோவில் உள்ள கோல்டன்கேட் பாலம் போன்ற முக்கிய இடங்களில் இந்த ஓட்டம் நடைபெறவுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை ஒருங்கிணைத்து அவர்களை இந்தியாவின் வளர்ச்சிக்கான பயணத்தில் பங்கேற்க செய்வதே இந்த ஓட்டங்களின் நோக்கமாகும்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்வுகள், மரக்கன்று நடும் இயக்கங்கள் உள்ளிட்டவையும் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2170999
***
SS/PLM/AG/SH
(Release ID: 2171418)
Visitor Counter : 12