சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய புவி அறிவியல் விருதுகள் – செப்டம்பர் 26 வழங்குகிறார் குடியரசுத்தலைவர்

Posted On: 25 SEP 2025 8:45AM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் நாளை (26.09.2025) நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய புவி அறிவியல் விருதுகளை வழங்கவுள்ளார். காலை 11.00 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு கிஷண் ரெட்டி, இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

1966-ம் ஆண்டு சுரங்க அமைச்சகத்தால் இந்த விருது நிறுவப்பட்டது. 2009-ம் ஆண்டு வரை இது தேசிய கனிம விருது என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. புவி அறிவியல், கனிம சுரங்கங்கள் உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்படுவோருக்கு 3 பிரிவுகளாக இந்த விருது வழங்கப்படுகிறது.

  1. தேசிய புவி அறிவியல் வாழ்நாள் சாதனையாளர் விருது
  2. தேசிய புவி அறிவியல் விருது
  3. இளம் தேசிய புவி அறிவியலாளர் விருது

என்ற பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.  2024-ம் ஆண்டுக்கு இந்த மூன்று பிரிவுகளில் விருதுகள் பெற 208 பரிந்துரைகள் பெறப்பட்டன. கடும் ஆய்வுக்குப் பின்னர் 12 விருதுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் 9 விருதுகள் தனிநபர் விருதுகளாகவும், 3 விருதுகள் குழு விருதுகளாகவும் மொத்தம் 20 விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2170968   

***

SS/PLM/AG/SH


(Release ID: 2171073) Visitor Counter : 27