பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
பீகாரில் ரூ. 2,192 கோடி செலவில் பக்தியார்பூர் – ராஜ்கீர்-திலையா ரயில்வே வழித்தடத்தை இரட்டிப்பாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
24 SEP 2025 3:05PM by PIB Chennai
பீகாரில் ரூ. 2,192 கோடி செலவில் பக்தியார்பூர் – ராஜ்கீர்-திலையா ரயில்வே வழித்தடத்தை இரட்டிப்பாக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் 4 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டத்தின் மூலம் தற்போதுள்ள இந்திய ரயில்வே வலை அமைப்பில் 104 கி.மீ. அதிகரிக்கும்.
ராஜ்கீர் (சாந்தி ஸ்தூபம்), நாளந்தா, பாவாப்பூரி போன்ற முக்கியமான இடங்களுக்கு ரயில்வே போக்குவரத்து தொடர்பை இந்தத் திட்டம் வழங்குவதால் நாடு முழுவதிலுமிருந்து யாத்ரிகர்களையும், சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கும்.
முன்னேற விரும்பும் இரண்டு மாவட்டங்களையும் (கயா, நவாடா) சுமார் 1434 கிராமங்களையும், 13.46 லட்சம் மக்களையும் இணைப்பதாகவும் இந்தத் திட்டம் இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2170566
***
SS/SMB/AG/SH
(रिलीज़ आईडी: 2170889)
आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada