பாதுகாப்பு அமைச்சகம்
மொராக்கோவில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் பாதுகாப்பு அமைச்சர் உரையாடி சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவின் கட்டுப்பாட்டையும், உறுதிப்பாட்டையும் எடுத்துரைத்தார்
Posted On:
22 SEP 2025 12:03PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2025 செப்டம்பர் 21 அன்று மொராக்கோவின் ரபாட் நகரில் இந்திய வம்சாவளியினரிடையே உரையாடினார். அப்போது சிந்தூர் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினரின் உறுதியான நடவடிக்கையை இந்திய வம்சாவளியினர் பாராட்டினார்கள். பாதுகாப்பு படையினர் முழு அளவில் தயாராக இருந்தனர் என்றும், பஹல்காமில் அப்பாவி இந்தியர்கள் மீது கோழைத்தனமாக நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். இந்தியாவின் நடவடிக்கைகள் முறையானது என்றும் அத்துமீறாதது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பன்முக வளர்ச்சியை அடைந்தது என்று திரு ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார். உலகளாவிய மற்றும் புவிசார் அரசியல் சவால்களுக்கிடையே இந்தியா விரைவாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரமாக உள்ளது என்றும், உலகில் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் 11-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு முன்னேறி விரைவில் 3-வது இடத்தை அடையும் என்றும் அவர் கூறினார். பத்தாண்டுகளுக்கு முன்பு 18 யூனிகார்ன்களாக இருந்த புத்தொழில் நிறுவனங்கள் தற்போது 118- ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட தொழில்துறையின் வளர்ச்சி குறித்து குறிப்பிட்ட அவர், இத்துறை ரூ.1.5 லட்சம் கோடி அளவிற்கு உற்பத்தியை கண்டுள்ளதாகவும், ரூ.23,000- கோடிக்கும் அதிகமான மதிப்புடைய பாதுகாப்புத் தளவாடங்கள் 100 நாடுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
***
(Release ID: 2169449)
SS/IR/AG/KR
(Release ID: 2169998)