பாதுகாப்பு அமைச்சகம்
கடற்படை தலைமை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இலங்கை செல்கிறார்
Posted On:
22 SEP 2025 9:15AM by PIB Chennai
இலங்கை பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூர்யாவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாக செல்லும் இந்திய கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி அந்நாட்டு முப்படைகளின் தளபதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகளிடம் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
கடல்சார் பாதுகாப்பு, கடற்படையின் திறனை மேம்படுத்துதல், கூட்டுப் பயிற்சி மற்றும் இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான துறைகளை கண்டறிவது ஆகியவை குறித்த பேச்சுவார்த்தைகளும் இதில் அடங்கும்.
கொழும்புவில் நடைபெற உள்ள சர்வதேச கடல்சார் மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார். இந்த மாநாடு இந்திய பெருங்கடலில் மாறிவரும் கடல்சார் சூழல்கள் என்ற கருப்பொருளுடன் நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2169374
***
SS/SV/LDN/KR
(Release ID: 2169473)