வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள பணிகளைக் குறைப்பது, பணியிடங்களில், தூய்மைப் பராமரிப்பதற்கான சிறப்புத் தூய்மை இயக்கம் 5.0 - மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

இடுகை இடப்பட்ட நாள்: 19 SEP 2025 12:42PM by PIB Chennai

அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள பணிகளைக் குறைக்கும் வகையிலும், பணியிடங்களில், தூய்மைப் பராமரிக்கும் வகையிலும் சிறப்புத் தூய்மை இயக்கத்தை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற  மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்புத் தூய்மை இயக்கம் அக்டோபர் 2-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.  இந்த சிறப்புத் தூய்மை இயக்கம் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. இம்மாதம் 15-ம் தேதியிலிருந்து 30-ம் தேதி வரை தூய்மை இயக்கத்திற்கான முன் தயார் நிலைப் பணிகளும், இரண்டாவது கட்டமாக அடுத்த மாதம் 2-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தூய்மை இயக்கமாக நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான தூய்மை இயக்கப் பிரசாரத்தில் மின்னணு கழிவுகளை அறிவியல்பூர்வமாக வெளியேற்றும் நடவடிக்கைகளில், கட்டுப்பாடுகளுடன் கூடிய நிலையான செயல்முறை நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டும் நெறிமுறைகளுடன் மேற்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள மின்னணு கழிவு மேலாண்மை விதிமுறைகள் 2022-ன்படி, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.  மின்னணு கழிவுகளை அகற்றுவதற்கான நடைமுறைகள் தவிர, குறித்த நேரத்தில் சேவைகளை வழங்குவதில் நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பது, நாடாளுமன்றம் மற்றும் மத்திய- மாநில அரசுகளின் பரிந்துரைகள், அமைச்சகங்களுக்கு இடையிலான தகவல் தொடர்புகள், பிரதமர் அலுவலகத்தின் பரிந்துரைகள் உட்பட பல்வேறு அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2168371

***

SS/SV/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2168428) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi